நீலகிரி மாவட்ட ம.ம.க நிர்வாகிகள் உள்ளிட்ட 6 சகோதரர்கள் ஊட்டியில் இருந்து புறப்பட்டு திருச்சி சென்று விட்டு மீண்டும் ஊட்டி நோக்கி காரில் பயணம் செய்தனர்.
இவர்கள் பயணம் செய்த கார் மீது கரூர் மயிலம்பட்டி அருகே எதிரே தாறுமாறாக வந்த லாரி மோதியதால் காரில் இருந்த நீலகிரி மாவட்ட ம.ம.க செயலாளர் ஷேக், ஊட்டி ம.ம.க நகரச் செயலாளர் செய்யது சாதிக் மற்றும் மத்தீன், சைபுல்லாஹ், இஹ்ஸான்,யுனுஸ் ஆகிய சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னாலில்லாஹி....
காயமடைந்தவர் மரணம்...
கடந்த ஏப்ரல் 5 அன்று மதுரை ரயில் நிலையத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை வழி அனுப்பி விட்டு நெல்லை திரும்பிய தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள் பயணம் செய்த கார் விபத்திற்குள்ளாகியது. இதில் பயணம் செய்த ஏழு சகோதரர்களில் ஒருவரான பாளையங்கோட்டை சாந்தி நகர் நவாஸ் கான் (வயது 21) தலையில் பலத்த அடியுடன் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று (ஏப்ரல் 9) அதிகாலை 4 மணி அளவில் மரணமடைந்தார். (இன்னாலில்லாஹி...).
0 கருத்துகள்: on "சாலை விபத்தில் 6 ம.ம.க வினர் உயிரிழப்பு"
கருத்துரையிடுக