புதுடெல்லி:மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் பொய்யாக குற்றஞ்சாட்டி கைதுச்செய்த அநியாயமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட ஃபாஹிம் அன்சாரி மற்றும் ஸபாஉத்தீன் அஹ்மத் ஆகியோரின் கைதுக்குக் காரணமான ராகேஷ் மரியாவை ஏ.டி.எஸ்ஸின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என ஜாமியா ஆசிரியர்கள் நல்லிணக்க கழகம் கோரியுள்ளது.
'மும்பை தாக்குதல் வழக்கின் தீர்ப்பின் மூலம் ஃபாஹிம் மற்றும் ஸபாஉத்தீனுக்கு எதிரான வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும் மும்பை போலீஸ் கூறியது என்னவெனில் இவர்களிருவரும் இலக்குகளை சர்வே எடுத்தார்கள் என்று.
மும்பை தாக்குதல் வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி தஹ்லியானி தனது தீர்ப்பில் காமா மருத்துவமனையில் தீவிரவாதிகளின் தாக்குதலை தடுக்க போலீஸ் தவறிவிட்டது என்று கூறி போலீசாரின் வீழ்ச்சியை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
போலீஸ் கூடுதல் படையை காமா மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் உயிரிழப்பையும், பொருளிழப்பையும் தடுத்திருக்கலாம். மும்பைத் தாக்குதலில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட 3 அதிகாரிகளில் ஒருவரான காம்தேவின் மனைவி வினிதா காம்தே கூறுகையில், "ஏ.டி.எஸ் தலைவர் கர்காரே தொடர்ந்து அதிக படைகளை அனுப்ப போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்த பொழுதும்,கூடுதல் படையை அனுப்ப ராகேஷ் மரியா மறுத்தார்" என்று கூறியுள்ளார்.
அந்த ராகேஷ்மரியா தான் தற்பொழுது புனே குண்டுவெடிப்பை விசாரிக்கும் ஏ.டி.எஸ்ஸின் தலைவராக உள்ளார். ராகேஷ்மரியாவை உடனடியாக ஏ.டி.எஸ் தலைவர் பதவியிலிருந்து விலக்கி ஃபாஹிம் அன்சாரி மற்றும் ஸபாஉத்தீனுக்கெதிராக பொய்வழக்கை புனைந்து கைதுச்செய்து சிறையிலடைத்து சித்திரவதைச் செய்ததற்காக வழக்கு பதிவுச் செய்ய வேண்டும்.
புலனாய்வு ஏஜன்சிகள் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கு பல குண்டுவெடிப்புகளில் தெளிவான பின்னரும் முஸ்லிம்களைத்தான் குறி வைக்கின்றன. முஸ்லிம் விரோத மனப்பாண்மைக் கொண்ட போலீஸ் அதிகாரிகளால் பல வாரங்களாக இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர்.
மர்மமான நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்காரேயையும், வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மிக்கும் எங்களது மரியாதையை செலுத்துகிறோம்.' என ஜாமியா ஆசிரியர்கள் நல்லிணக்க கழகம் கூறியுள்ளது.
மனீஷா சேத்தி, காஸி ஷாநவாஸ், அதீல் மெஹ்தி மற்றும் அஹ்மத் சோயப் ஆகியோர் ஜெ.டி.எஸ்.ஏ சார்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
source:twocircles.net
0 கருத்துகள்: on "ராகேஷ்மரியாவை ஏ.டி.எஸ்ஸின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும்- ஜாமியா ஆசிரியர்கள் நல்லிணக்க கழகம்(JTSA) கோரிக்கை"
கருத்துரையிடுக