5 மே, 2010

ஐ.டி.பி வழங்கும் முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பாட்னா:சவூதி அரேபியாவின் ஜித்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தன்னலமற்ற சேவை நிறுவனம் ஐ.டி.பி (Islamic Development Bank) என்றழைக்கப்படும் இஸ்லாமிய முன்னேற்ற வங்கி.

இவ்வங்கி ஆண்டுதோறும் உலகின் பல்வேறு நாடுகளில் தொழில் கல்வி பயிலும் நன்றாக படிக்கக்கூடிய அதேவேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக்கடன் வழங்கி வருகிறது.

ஐ.டி.பி யின் சேவையை பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் ஐ.டி.பியின் முகவராக செயல்படுவது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசு சார நிறுவனமான எஸ்.ஐ.டி என்றழைக்கப்படும் Students Islamic Trust ஆகும்.

வழக்கம்போல் ஐ.டி.பி இவ்வாண்டும் அதாவது 2010-11 கல்வியாண்டில் மருத்துவம், பொறியியல், ஹோமியோபதி, யூனானி, ஆயுர்வேதம், விவசாயம், மீன்வளம், காட்டு இலாகா, உணவு தொழில்நுட்பம், மைக்ரோ பயோலஜி, பயோடெக்னாலஜி, தொழில் நிர்வாகத்திற்கான பட்டப் படிப்பு,சட்டம் ஆகிய படிப்புகளில் சேரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உதவித் தொகையுடனான வட்டியில்லா கல்விக்கடன் வழங்கவிருக்கிறது.

இதற்கு அடிப்படைத் தகுதி முஸ்லிமான மாணவ மாணவிகள் மெட்ரிகுலேஷன் அல்லது செகண்டரி ஸ்கூலில்(+2) 60 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

நன்றாக படிக்கக்கூடிய அதேவேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிலுள்ள மாணவராக இருக்க வேண்டும். மாணவர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 250 ஆகும். இவர்களுக்கு டியூசன் கட்டணம், மருத்துவக் கட்டணம், ஆடைகள் உள்ளிட்ட வாழ்க்கைச் செலவுக்கான தொகை வழங்கப்படும்.

மெடிக்கல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 45 ஆயிரமும், பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 40 ஆயிரம் ரூபாயும் அவர்கள் படிப்பை முடிக்கும் வரை தொடர்ந்து வழங்கப்படும்.

இத்தொகையை அவர்கள் படிப்பு முடிந்த பின்னர் எளிதான தவணை முறைகளில் திருப்பிக் கட்டவேண்டும். இது முற்றிலும் வட்டியில்லா கடனாகும்.

ஐ.டி.பி உதவித்தொகை மற்றும் வட்டியில்லா கடன் தொகை மூலம் இதுவரை 1163 மாணவர்கள் படிப்பை முடித்துள்ளனர். தற்பொழுது 645 மாணவர்கள் படிப்பைத் தொடருகின்றனர். ஐ.டி.பி இவ்வுதவித் தொகையை வழங்க ஆரம்பித்தது 1983 ஆம் ஆண்டிலிருந்தாகும்.

இவ்வாண்டு விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் ஆகஸ்ட் 25 ஆகும். இதற்கான விண்ணப்பத்தை கீழ்க்கண்ட இணையதள முகவரியிலிருந்து தர இறக்கம் (Download) செய்யலாம் http://www.sit-india.org/scholarship.html அல்லது கீழ்க்கண்ட அலுவலகத்திலிருந்தும் விண்ணப்பத்தை பெறலாம்.
முகவரி
Mohammad Saifullah Rizwan
Executive Secretary
The Student Islamic Trust
Abul Fazal Enclave,
Jamia Nagar
New Delhi-110025
Contact: 91-9990630127, 91-11-26941028.
Source:twocircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐ.டி.பி வழங்கும் முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன"

கருத்துரையிடுக