ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கும் திட்டத்தில் மாற்றமில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
துருக்கி மற்றும் பிரேஸிலுடனான ஈரானின் அணுத் திட்டங்கள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் அணுத் திட்டங்கள் தொடர்பில் மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக சந்தேகம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆக்கப்பூர்வ பயன்பாட்டிற்காக ஈரான் அணு ஆலைகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அணுவாயுத உற்பத்திகள் நடைபெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சரக்குக் கப்பல் கண்காணிப்பு வங்கி கொடுக்கல் வாங்கல் போன்றவை தொடர்பாக ஈரான் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், மேற்குலக நாடுகளின் இந்த தீர்மானத்திற்கு பிரேஸில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

0 கருத்துகள்: on "ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கும் திட்டத்தில் மாற்றமில்லை: ஒபாமா"
கருத்துரையிடுக