முறையான பயிற்சி இல்லாத விமானிகளை கொண்டு இயக்கியதே போலந்து அதிபர் சென்ற விமானம் அண்மையில் விபத்துள்ளானதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் போலந்து அதிபர் உள்பட 96 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வரும் ரஷ்ய மற்றும் போலந்து அதிகாரிகள் அடங்கிய கூட்டுப்படையினர் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.
முறையான பயிற்சி இல்லாத விமானிகளை வைத்து விமானங்களை இயக்கியது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
விமானத்தின் கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்ததில் விபத்தில் சிக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் விமானிகள் மட்டும் இருக்க வேண்டிய அறையில் பயணிகளின் சிலர் குரல் கேட்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
மோசமான வானிலை இருந்த நேரத்தில் விமானத்தை திசை திருப்புமாறு விமானிகளை அவர்கள் வழிநடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர்.
விபத்திற்கு தொழிற்நுட்ப கோளாறுகளோ அல்லது தீவிரவாதிகளின் சதிச் செயலோ காரணம் இல்லை என்றும் போலந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: on "போலந்து அதிபர் விமான விபத்துக்கு பயிற்சி இல்லாத விமானிகளை கொண்டு இயக்கியதே காரணம்"
கருத்துரையிடுக