20 மே, 2010

புர்கா அணிவதற்குத் தடை:பிரான்ஸ் நாட்டு அமைச்சரவை ஒப்புதல்

பாரிஸ்:முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரை (veil) பொது இடங்களில் அணிவதை தடை செய்யும் திட்ட வரைவு சட்டத்திற்கு ஃபிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்விசயத்தில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் வழிமுறை சிரமமானது, ஆனால் அது ஒரு சரியான வழி முறையாகத்தான் இருக்கும் என்று ஃபிரான்ஸ் பிரதமர் நிகோலஸ் சர்கோசி கூறியதாக அலுவலக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்கோஸின் அமைச்சர்கள் பெரும்பான்மை வகிப்பதால் அழுத்தம் கொடுத்து இந்த சட்டத்தினை பார்லிமெண்டில் அமல்படுத்த முடியும்

இது ஒரு நீதிக்கு புறம்பான சட்டம் இதை நீதிபதிகள் புறக்கணிக்க முடியும். மேலும் இது ஐரோப்பிய யூனியனின் சட்டத்திற்கு புறம்பானதாகும் ஐரோப்பிய யூனியனின் சட்டத்தினை வீழ்ச்சிக்கு கொண்டு செல்வதாக அமையும் என்று அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கிறனர்.

நாம் ஒரு பழம்பெருமை வாய்ந்த நாட்டில் வாழ்கின்றோம் மனித நேயத்தினை கவுரவிக்கின்றோம். பெண்களையும் சிறப்பாக கவுரவிக்கின்றோம். இது போன்ற கருத்துகள் அபிப்ராயங்கள் மூலம் நாம் ஒன்றாக இணைந்து வாழ முடியும். என்று சர்கோசி வற்புறுத்தினார்.

முகத்தை மறைக்கும் விதமாக திரையை அணிவது மனித மாண்புகளை பாதிப்பதாகும். இது ஒரு அடிப்படை வாதமாகும். அதனால் குடியரசின் இத்தகைய உடன்படிக்க தேவையாகும். என்றும் சர்கோஸி தெரிவித்தார்.

பிரான்சில் வாழும் யாரும் முகத்தை மறைக்கும் விதமான ஆடைகளை அணியக் கூடாது. இதை மீறுபவர்கள் மீது 150 யூரோ (USD 180) அபராதம் விதிக்கப்படும் மேலும் ஐரோப்பிய யூனியனின் குடிமகன் மதிப்புகளை அறிந்து செயல்படும் நடைமுறை வகுப்பு அளிக்கப்படும்.

யாரேனும் ஒருவரை முகத்திரை அணியுமாறு வற்புறுத்தியோ கொடுமை படுத்தியோ பாலின வேறுபாட்டினை காரணம் காட்டி அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தினாலோ ஒரு வருட சிறை தண்டை மற்றும் 1500 யூரோ அபராதமும் விதிக்கப்படும்.இவ்வாறு இந்த சட்டத்தின் சரத்துகள் கூறுகின்றன.

எல்லா பொது இடங்களும் உட்பட கடைகள், திரை அரங்குகள், உணவகங்கள் மற்றும் வியாபார இடங்கள் பொது மக்கள் பயன்படுதுவதற்கான இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என்று இந்த சட்டம் முகத்திரை அணிய தடை செய்யப்பட்ட இடங்களை விரிவாக விளக்குகின்றது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புர்கா அணிவதற்குத் தடை:பிரான்ஸ் நாட்டு அமைச்சரவை ஒப்புதல்"

கருத்துரையிடுக