வருகின்ற 2011 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் அ.ஃப்க்ருதீன் அவர்க்ள் கூறும்போது; "1931 ல் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஜாதிவாரியாக கணக்கெடுப்பின் அடிப்படையிலே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52% இருப்பதாக மண்டல் கமிஷன் தெரிவித்தது. இதனடிப்படையிலேயே இடஒதுகீடு போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த 52% எண்ணிக்கை பல்வேறு சர்ச்சைக்கு உட்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ஜாதியினர் 1931க்கு பிறகு பிற பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் உட்பட சில சிறுபான்மையினர் முந்தைய ஜாதிவாரியாக கணக்கெடுப்பில் தங்கள் எண்ணிக்கையினை முழுமையாக பதிவு செய்யப்படவில்லை என்ற புகாரும் உள்ளது. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது அந்த நாட்டில் உள்ள அனைத்து சமூகமும் சமமாக வளர்ச்சியடைய வேண்டும். பின் தங்கிய சமூகங்களை முன்னேற இடஒதுக்கீடு போன்ற சலுகைகளை அரசு சரியாக திட்டமிட்டு வழங்குவதற்க்கு இந்த ஜாதிவாரியான கணக்கெடுப்பு மிகவும் அவசியம்.
மேலும் இந்த ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நம் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது அல்ல. இந்நிலையில் வருகின்ற 2011 ஆம் கணக்கெடுப்பில் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவரவேற்கிறது.” என்று கூறினார்.
0 கருத்துகள்: on "ஜாதிவாரியான கணக்கெடுப்பு மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது அல்ல - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா"
கருத்துரையிடுக