19 மே, 2010

காபூல்:தாலிபான் போராளிகள் தாக்குதல்:5 அமெரிக்க படையினர் உள்ளிட்ட 18 பேர் மரணம்

காபூல்:கடுமையான பாதுகாப்பு நிறைந்த காபூல் நகரின் இதயப் பகுதியில் தாலிபான் போராளிகள் நடத்திய தாக்குதலில் ஆறு நேட்டோ அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் உள்ளிட்ட 18 பேர் கொல்லப்பட்டனர்.

நேட்டோ படையினரில் 5 அமெரிக்க ராணுவத்தினரும், 1 கனடா நாட்டு ராணுவ வீரனும் உட்படுவர். ஐம்பதிற்கு மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அதிகமான வெளிநாட்டினர் கொல்லப்பட்டிருக்கலாம் என மூத்த போலீஸ் அதிகாரியை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் தாருல் அமான் சாலையில் நேட்டோ படையினரின் வாகன அணிவரிசையை லட்சியமாகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காலை 8:30 மணிக்கு வெடிப்பொருட்களுடன் வந்த கார் நேட்டோ வாகனங்களை இடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தது. தாக்குதலில் ஐந்து நேட்டோ வாகனங்கள் தகர்ந்தன. இத்தாக்குதல் நடைபெறும் பொழுது அவ்வழியே பஸ்ஸில் சென்றுக் கொண்டிருந்தோரும் பலியாயினர்.

தாக்குதலின் பொறுப்பை தாலிபான் ஏற்றுக்கொண்டது. 750 கிலோகிராம் வெடிப்பொருட்களை பயன்படுத்திதான் இத்தாக்குதல் நடந்தது என போராளிகளின் செய்தித் தொடர்பாளர் ஸபீஹுல்லாஹ் முஜாஹித் அறிவித்தார்.

எல்லாவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பிறகும் தலைநகரின் இதயப்பகுதியில் போராளிகள் தாக்குதல் நடத்தியது அந்நிய ஆக்கிரமிப்பு படையினரையும், கர்ஸாயியின் அரசையும் நடுங்கச் செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி இந்தியர்கள் உள்பட 16 பேர் மரணித்த கஸ்ட் ஹவுஸ் தாக்குதலுக்கு பிறகு காபூலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. மே மாதம் முதல் அந்நிய ராணுவத்தினர் மற்றும் ஆப்கான் ஆட்சிபீடத்திற்குமெதிராக தாக்குதலின் வசந்த காலம் துவங்கும் என்று ஏற்கனவே தாலிபான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்க சுற்றுப்பயணம் முடித்துவிட்டு திரும்பிய அதிபர் ஹமீத் கர்ஸாயி இதுத்தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவிருக்கும் பொழுதுதான் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 202 நேட்டோ படையினர் ஆப்கானில் கொல்லப்பட்டுள்ளனர். 2001 ஆம் ஆண்டு ஆப்கான் ஆக்கிரமிப்பிற்கு பிறகு அதிகமான அந்நிய ராணுவத்தினர் கொல்லப்பட்டது 2009 ஆம் ஆண்டு ஆகும். 520 பேர் அவ்வாண்டில் மரணித்திருந்தனர். தாக்குதலை கர்ஸாயியும், நேட்டோ படைத் தலைவரும் கண்டித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காபூல்:தாலிபான் போராளிகள் தாக்குதல்:5 அமெரிக்க படையினர் உள்ளிட்ட 18 பேர் மரணம்"

கருத்துரையிடுக