அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் விஞ்ஞானிகள், இந்தியாவில் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தொழில் நுட்ப ரீதியாக தாக்கக்கூடிய ஒரு யுக்தியை தாங்கள் உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணையத்தில் பிரசுரித்திருக்கும் ஒரு வீடியோ ஒன்று, அவர்கள் தயாரித்த மின்னணு இயந்திரம் ஒன்றை வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைப்பதைக் காட்டியது.
பிறகு அவர்கள் ஒரு மொபைல் தொலைபேசி வாயிலாக இந்த இயந்திரத்துக்கு செய்திகளை அனுப்புவதன் மூலம், வாக்குப் பதிவு முடிவுகளை மாற்ற முடிகிறது.
இந்தியத் தேர்தல் அதிகாரிகள் தங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை இவ்வாறு மோசடி செய்யப் பயன்படுத்த முடியாது என்றும் மோசடி செய்யப் பயன்படுத்துவதற்கு ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தைக்கூட முதலில் பெறுவதே மிகக் கடினமானதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் புழக்கத்தில் இருக்கிறது. தற்போது நடக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமே முழுக்க பயன்படுத்தப்படுகிறது.

BBC
0 கருத்துகள்: on "மின்னணு வாக்கு இயந்திரத்தின் வாக்குப் பதிவுகளை மாற்ற முடியும்- மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்"
கருத்துரையிடுக