20 மே, 2010

நக்ஸல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு- சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங்

புதுடெல்லி:நக்ஸல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு இருக்கலாம் என்று சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கூறினார்.

டெல்லி வந்துள்ள அவர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: "பயங்கரவாதச் செயல்களை செய்து வரும் நக்ஸல்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைக்கவேண்டும்.​ ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாக நக்ஸல்கள் உள்ளனர்.​ துப்பாக்கி முனையில் ஆட்சியைக் கைப்பற்ற அவர்கள் விரும்புகின்றனர்.

நக்ஸல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.​ இதற்கு என்னிடம் உறுதியான தகவல்கள் இல்லை என்றபோதும் அவர்களுடைய தாக்குதலை வைத்துப் பார்க்கும்போது லஷ்கர்-இ-தொய்பாவுடன் நக்ஸல்களுக்கு தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.

ஆயுதங்கள்,​​ வெடிகுண்டுகள்,​​ 100 சதவீதம் தொழில்நுட்ப உறுதியுடன் அவர்கள் நடத்தும் தாக்குதல்களைப் பார்க்கும்போது இதன் பின்னணியில் நிபுணர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.​ அவர்கள்தான் நக்ஸல்களுக்கு இந்த வகைப் பயிற்சியை அளித்து வருகின்றனர் என்று தெரிகிறது". என்றார்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நக்ஸல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு- சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங்"

கருத்துரையிடுக