பாரிஸ்:இரண்டாம் உலகப்போரில் ஃபிரான்ஸிற்காக போரிட்டு ஷஹீதான 7 முஸ்லீம் படைவீரர்களின் உடல்களை கொண்ட ஒரு கபரஸ்தான் இருப்பது ஃபிரான்ஸின் 'வான்டல் என்கிற பழங்குடியினத்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை ஃபிரான்ஸின் ராணுவ அமைச்சர் ஹேர்வே மோரின் ஆழ்ந்த வருத்தத்துடன் ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த வியாழனன்று, இந்த கபரஸ்தான் இருப்பதும் - வரலாற்றிலிருந்து இது மறைக்கப்பட்டிருப்பது அம்பலமானதும், 'இந்த ஈனத்தனமுள்ள கோழைத்தனத்தை எனது அழ்ந்த வருத்ததுடன் பதிவு செய்ய விரும்புகின்றேன்' என்று ஹேர்வே மோரின் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மதத்துவேஷத்தில் முஸ்லீம்களின் பங்கை மறைத்திருப்பதை அறிந்து, 'இம்முஸ்லீம் படைவீரர்களுக்கு அவர்களின் நாட்டுப் பற்றிலும் பொறுப்புணர்சியிலும் உருகி நான் இவர்களை தலைவணங்குகின்றேன்!' என்று உணர்ச்சிப் பொங்க மோரின் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த படைவீரர்கள் ஒரு உண்மையான, சுதந்திரமான, நீதிமிக்க ஐரோப்பாவையும், ஃபிரான்சையும் உருவாக்க தன் வாழ்கையை அற்பணித்துள்ளனர் என்றார்.
இது குறித்து, ஃபிரான்ஸ் தேசிய முஸ்லீம் கவுன்சில் தெரிவிக்கையில் 'இந்த கபரஸ்தானை கண்டுபிடித்ததும் மூன்று பழங்குடியினர் உயிர் நசுக்கி கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 130 கபர்கள் கொண்ட அந்த கபரஸ்தானில் சுமார் 17 கபர்களில் ஃபிரான்ஸ் முஸ்லீம் படைவீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
ஐரோப்பாவில்,ஃபிரான்ஸில் தான் சிறுபான்மையினராக முஸ்லீம்கள் அதிகம் வாழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் நாட்டிற்காக போராடி உயிர்நீத்ததை ஃபிரான்ஸ் அரசு அறிந்தும் புர்கா முதல் தாடி வரை முஸ்லீம் விரோத போக்கை ஃபிரான்ஸ் இன்றுவரை கடைபிடித்து வருவது வருத்தத்திற்குறியது.
ஃபிரான்ஸின் மூலம் தற்போது புர்கா தடை செய்வதில் பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் என்று பல நாடுகள் இன்று போட்டி போட்டுக் கொண்டு ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
source:Siasat
0 கருத்துகள்: on "ஃபிரான்ஸில் முஸ்லீம் படைவீரர்களின் கபரஸ்தான் இருப்பது அம்பலமாகியுள்ளது"
கருத்துரையிடுக