சட்டீஸ்கரில் தந்தேவடா மாவட்டத்தில் கடந்த மாதம் மாவோயிஸ்டுகள் நடத்தி தாக்குதலில் 80 துணை ராணுவத்தினரும் போலீசாரும் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலின் போது படையில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகளை பாராட்டி அவர்களின் இயக்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையை மாவோயிஸ்டுகளின் செய்தித் தொடர்பாளர் அசாத் வெளியிட்டார் அதில் ராணுவத்துக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டுகிறோம்.
ஆதிவாசிகள் மீது தேவை இல்லாமல் தாக்குதல் நடத்தும் சோனியா-மன்மோகன்சிங், சிதம்பரம்- பிரணாப் முகர்ஜி கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது.
சிதம்பரத்தின் மத்திய படைகள் ஆதிவாசிகளின் வாழ்விடங்களை தீவிரவாதிகள் இருப்பிடங்கள் போல மாற்றிவிட்டன. கடந்த 8 மாதங்களில் மட்டும் 114 ஆதிவாசிகளை மத்திய அரசு படையினர் கொன்றுள்ளனர்.
ஒவ்வொரு மலைவாழ் கிராமத்திலும் 30 முதல் 40 ஆதிவாசிகளை பிடித்து வைத்துள்ளனர். தேவைப்படும்போது அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு, காட்டுக்குள் நடந்த சண்டையில் மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றுவிட்டோம் என்கிறார்கள்.
மத்திய படையினர் இந்த போக்கை கைவிட வேண்டும். இல்லையெனில் தந்தேவடா மாவட்ட தாக்குதல் போல் மீண்டும் ஒரு பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

inneram
0 கருத்துகள்: on "ஆதிவாசிகளை சுட்டுக் கொல்லும் போக்கை கைவிடாவிட்டால் தந்தேவடா தாக்குதல் போல் மீண்டும் ஒரு பெரிய தாக்குதல் நடத்தப்படும்- மாவோயிஸ்ட்"
கருத்துரையிடுக