தமிழகத்தின் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க மே 17-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு மொத்தம் 25,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன.இதுவரை அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
9,350 விண்ணப்பங்கள் குவிந்தன:
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மே 26-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து எம்.பி.பி.எஸ். (பி.டி.எஸ். படிப்பில் சேரவும் இதே விண்ணப்பம்தான்.) விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மாணவர்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு தொடர்ந்து அனுப்பி வருகின்றனர்.
கடந்த மூன்று தினங்களில், அதாவது சனிக்கிழமை (மே 29) மாலை வரை மொத்தம் 9,350 பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்துள்ளதாக அதன் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவிக்கிறார். கடந்த ஆண்டு மொத்தம் 14,321 மாணவ-மாணவியர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 15-லிருந்து 17-ஆக அதிகரித்து, எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 1,653-ஆக உயர்ந்துள்ளது.
எனவே, விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்புக்கு விண்ணப்பம் பெற்றுள்ள மாணவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பலாம்.
சென்னை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு நேரடியாக வந்து அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் போடலாம்.
மருத்துவ மாணவர் சேர்க்கைப் பணிக்காக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமையும் (மே 30) செயல்படும்; எனவே இந்த அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நேரடியாக வந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பெட்டியில் போடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தபால் தாமதத்தைத் தவிர்க்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், திங்கள்கிழமை (மே 31) மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டும்.
விண்ணப்பம் கிடைத்துவிட்டதா?
எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு கிடைத்து விட்டதா என்பதைத் தெரிந்து கொள்ள இணையதளத்தில் (www.tnhealth.org) வசதி செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 பதிவு எண், பிளஸ் 2 தேர்வு எழுதிய ஆண்டை இணையதளத்தில் பூர்த்தி செய்யும் நிலையில், விண்ணப்பம் கிடைத்து விட்டதைத் தெரிந்து கொள்ள முடியும்; விண்ணப்பம் கிடைத்ததற்கான ஏ.ஆர். பதிவு எண்ணையும் விண்ணப்பதாரர் உடனடியாக குறித்து வைத்துக் கொள்ள முடியும்.
ஜூன் 11-ல் ரேங்க் பட்டியல்:
எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்களை ஆய்வு செய்து, வரும் ஜூன் 7-ம் தேதி சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 11-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் ஜூன் 21-ம் தேதி தொடங்குகிறது.
2 லட்சம் பி.இ. விண்ணப்பம்: தமிழகத்தில் மொத்தம் உள்ள 1,72,445 பி.இ. இடங்களில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர். பி.இ. படிப்பில் சேருவதற்கும் விண்ணப்பிக்க திங்கள்கிழமை (மே 31) கடைசி நாளாகும்.
விண்ணப்பம் கிடைத்து விட்டதா?

பி.இ. படிப்பில் சேருவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து விட்டதா என்பதை இணையதளம்
www.annauniv.edu மூலம் மாணவர்கள் உறுதி செய்து கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சனிக்கிழமை (மே 29) மாலை வரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன என்று பி.இ. மாணவர் சேர்க்கை செயலர் ரேமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
ஜூன் 18-ல் ரேங்க் பட்டியல்:பி.இ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு வரும் ஜூன் 18-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் 28-ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது.

source:dinamani
0 கருத்துகள்: on "எம்.பி.பி.எஸ், பி.இ:விண்ணப்பிக்க நாளை கடைசி"
கருத்துரையிடுக