30 மே, 2010

குவாண்டனாமோ சிறையில் 48 கைதிகள் ஒரு குற்றமும் செய்யாதவர்கள்

வாஷிங்டன்:குவாண்டனாமோ சிறையில் விசாரணையில்லாமல் அடைக்கப்பட்டுள்ள 48 பேருக்கு எந்தவொரு தாக்குதலிலும் தொடர்பில்லை என பணிக்குழு ஒன்று நடத்திய ரகசிய புலனாய்வு அறிக்கையை நேற்று வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.

குவாண்டனாமோவிலிலுள்ள 240 சிறைக் கைதிகளில் 126 பேரை சொந்த நாட்டிற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ அனுப்ப ஒபாமா அரசு தீர்மானித்திருந்தது.

36 பேரை குற்றத்தின் அடிப்படையில் விசாரணைச் செய்யப்படும் என விவரிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் 48 பேரின் குற்றத்தைக் குறித்து எவ்வித தகவலுமில்லை.

இவர்கள் எந்தவொரு தாக்குதலிலும் பங்கு பெற்றார்கள் என்ற ஆதாரமோ அல்லது குற்றச்சாட்டோ இல்லை என 32பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த 48பேரையும் தொடர்ந்து காவலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கஸ்டடியில் வைத்தால் சர்ச்சையாகும் என்றாலும், விடுதலைச் செய்தால் ஏன் சிறையில் அடைத்தீர்கள் என்பதுக் குறித்து விவரம் அளிக்க வேண்டிவரும் என்பதால் சிறையிலடைப்பதுதான் அவர்களுடைய திட்டமென்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இவர்களை ஏன் குற்ற விசாரணை செய்யவில்லை என்பதற்கு இரண்டு காரணங்களாகும். இவர்களுக்கெதிராக வழக்கு இல்லை. போர்க் குற்றம்தான் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதனால் இவர்களுக்கெதிராக ஆதாரங்களோ சாட்சிகளோ இல்லை.மற்றொரு காரணம் ஆதாரங்களில்லாததால் வழக்கு செல்லாது.

பல்வேறு நாடுகளில் அல்காயிதாவுக்காக செயல்பட்டதாக கூறும் ஆதாரங்களை ஆஜராக்காவிட்டால் எட்டு ஆண்டுகள் கழித்து அந்த வழக்கு செல்லாது என்று சட்டம் கூறுகிறது.

பணிக்குழுவினர் சிறையில் 2009ம் ஆண்டு துவங்கிய இந்த புலனாய்வு விசாரணை கடந்த ஜனவரி மாதம்தான் முடிவடைந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குவாண்டனாமோ சிறையில் 48 கைதிகள் ஒரு குற்றமும் செய்யாதவர்கள்"

கருத்துரையிடுக