27 மே, 2010

வடகொரியா- தென்கொரியா மோதல் முற்றுகிறது

இரு நாடுகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ள பகுதியில் வானொலி ஒலிபரப்பை துவங்கினால் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியை மூடத் தயங்கமாட்டோம் என்று தென் கொரியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானொலி ஒலிபரப்பை தொடங்கும் பட்சத்தில் இரு நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொழிற்சாலை பகுதியில் தென்கொரியர்களையும், வாகனங்களையும் நுழைய அனுமதிக்கமாட்டோம் என்றும் வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

தென்கொரிய ராணுவக் கப்பலை சமீபத்தில் வடகொரியா தாக்கி மூழ்கடித்தது. இதற்கு தென்கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் சென்று வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தவும் ஆயத்தமாகி வருகிறது.

இதனிடையே,வடகொரியாவுக்கு பாடம் புகட்டும் சில திட்டங்களை தென்கொரியா தீட்டி வருகிறது. அதில் ஒன்றுதான் இரு நாடுகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்திவைத்த வானொலி சேவையை மீண்டும் துவங்குவது.

வானொலி சேவையை தொடங்கப் போவதாக தென்கொரியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வடகொரியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானொலி சேவையை தொடங்கினால் தென்கொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

தென்கொரியாவின் நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையே போரை மூட்டும் வகையில் உள்ளதாகவும் வடகொரியா கூறியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வடகொரியா- தென்கொரியா மோதல் முற்றுகிறது"

கருத்துரையிடுக