பெங்களூர்:பணம் வாங்கிக்கொண்டு மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டது தொடர்பான புகார் குறித்து எவ்வித விசாரணைக்கும் தயார் என்று ஸ்ரீ ராம சேனைத் தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்தார்.
பிரமோத் முத்தாலிக்,மற்றும் ராமசேனைத் தொண்டர்கள் பணம் வாங்கிக்கொண்டு மதக்கலவரத்தைத் தூண்டிவிடுகிறார்கள் என்று ஆஜ்தக் செய்திச்சேனலும், தெகல்கா பத்திரிகையும் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.
முத்தாலிக்,தன்னைச் சந்தித்த சிலரிடம் பணம் வாங்குவது போன்ற ரகசியமாகப் பிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை குறிப்பிட்ட செய்திச் சேனல் ஒளிபரப்பியது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த முத்தாலிக்,குறிப்பிட்ட ஊடகம், பத்திரிகை மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து முதாலிக் பெங்களூரில் நிருபர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
"நாங்கள் பணம் வாங்கிக்கொண்டு கலவரத்தைத் தூண்டிவிடுவதாக அவதூறுச் செய்தி வெளியிட்ட குறிப்பிட்ட ஊடகம், பத்திரிகை மீது 12 வழக்குகளைத் தொடர்ந்துள்ளோம்.
இந்த பொய் குற்றச்சாட்டால் ஹிந்துக்களுக்காகவும், ஹிந்துத்வா கொள்கைகளுக்காகவும் உழைத்துவரும் எங்களது அமைப்புக்கும் எனக்கும் மக்களிடையே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
நான் 35 ஆண்டுகளாக ஹிந்துக்களின் நலனுக்காக இந்த அமைப்பை துவக்கி பிரம்மச்சாரியாக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன். எனக்கென்று சொத்துக்கள் எதுவும் சேர்த்துக்கொள்ளவில்லை. இதுவரை 2 ஆயிரம் மாநாடு, கூட்டங்களை நடத்தியுள்ளோம்.
எங்கள் மீது பல்வேறு புகார்கள் தொடர்பாக 72 வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றில் 52 வழக்குகளில் நாங்கள் நிரபராதி என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டோம். ஹிந்துக்கள் நலனுக்காக நன்கொடை வாங்கி வருகிறோம்.
அதேபோலத்தான் அண்மையில் ஓவியக் கலைஞர் எனக் கூறிக்கொண்டு வந்த ஆஜ்தக் நிருபர் புஷ்பகுமாரிடம் நன்கொடையாகத்தான் பணம் வாங்கினோம்.
பிறகு ஹிந்துக்கள், சிறுபான்மை சமூகத்தவர் குறித்து அவர்கள் பேசினர்.நாங்கள் பேசியதை அவர்கள் ரகசியமாகப் படம் பிடித்துள்ளனர். பிறகு நாங்கள் கலவரம் ஏற்படுத்துவதற்குதான் அந்தப் பணத்தை வாங்குவதுபோல வீடியோ, உரையாடலை வெட்டி, ஒட்டி அதை செய்தியாக ஒளிபரப்பிவிட்டனர்.
இதற்காக அவர்கள் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளோம்.ஆனால் இதுவரை எங்கள் மீதான புகார் தொடர்பாக எவ்வித வீடியோ ஆதாரங்களையும் அவர்கள் போலீஸாரிடமோ,மாநில உள்துறை அமைச்சரிடமோ அளிக்கவில்லை.இந்த புகார் தொடர்பாக எவ்வித விசாரணைக்கும் நான் தயாராக உள்ளேன்.நான் தவறு செய்திருந்தால் என்னை தூக்கில் போடட்டும்". என்றார் அவர்.

source:dinamani
0 கருத்துகள்: on "பணத்துக்காக மதக் கலவரத்தை தூண்டிவிட்டேனா? விசாரணைக்குத் தயார்: பிரமோத் முத்தாலிக்"
கருத்துரையிடுக