28 மே, 2010

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண வரம்பை உயர்த்தக் கூடாது அமைச்சரை சந்தித்து கேம்பஸ் ஃபிரண்ட் கோரிக்கை

தனியார் பள்ளிகள் கல்விச்சேவை என கட்டணக் கொள்ளை நடத்தி வருவதை பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் நலனுக்காக மனக் குமுறலோடு சகித்து வந்தனர்.

தமிழக அரசு நீதிபதி கோவிந்த ராஜன் தலைமையில் ஒரு குழுவை நியமித்து ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண வரம்பை நிர்ணயித்தது.

இது தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண கொள்ளைக்கு கடிவலமிடவே, மேற்படி தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு உச்ச நீதி மன்றம் வரை சென்றது. ஆனாலும் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண வரம்பை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என கூறி உச்ச நீதி மன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது இதனால் ஏமாற்றம் அடைந்த தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தினர் தற்போதுள்ள கல்வி கட்டண வரம்பை உயர்த்தக் கோரி நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை அணுகி உள்ளனர்.

மாணவர்களின் எதிகால நலனை கருத்தில் கொண்டு மேற்படி தனியார் பள்ளிகளின் கோரிக்கையை நீதிபதி கோவிந்த ராஜன் கமிட்டி ஏற்க கூடாது என்றும் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண வரம்பை மிகவும் குறைவாக நிர்நைக்க வேண்டும் எனவும் கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் பொதுச் செயலாளர் அலி அசாருதீன் மற்றும் நிர்வாகிகள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை இன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண வரம்பை உயர்த்தக் கூடாது அமைச்சரை சந்தித்து கேம்பஸ் ஃபிரண்ட் கோரிக்கை"

கருத்துரையிடுக