ஓமன் நாட்டில் விசா காலம் முடிந்தும் தங்கியுள்ள இந்தியர்கள், தங்களின் கைரேகையை வரும் மே 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஓமன் மனிதவளத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் அவர்கள் எந்தவித அபராதத் தொகையும் செலுத்தாமல் இந்தியாவிற்கு திரும்ப முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மஸ்கட்டிலுள்ள இந்திய சமூகநலச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
ஓமனில் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியுள்ள இந்தியர்கள், பாதுகாப்பாகவும், அபராதத் தொகை செலுத்தாமலும் நாட்டிற்கு திரும்ப, உடனடியாக தங்கள் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.
தங்கியிருக்கும் நாட்டைவிட்டு வெளியேறும் போது கைரேகையைப் பதிவு செய்யவேண்டியது கட்டாயமான விதியாகும்.
இந்த நடைமுறைக்கு பிறகே,இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை இங்குள்ள இந்தியத் தூதரகம் மேற்கொள்ள முடியும்.
விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பதாக இதுவரை 21ஆயிரம் பேர் தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 11ஆயிரத்து 500 பேருக்கு கைரேகைப் பதிவு நடைமுறைகள் முடிந்துள்ளன.இவர்களில் 8 ஆயிரம் பேர் ஏற்கெனவே ஓமனை விட்டு வெளியேறிவிட்டனர்.
3,500 பேருக்கு ஏற்கெனவே கைரேகைப் பதிவுகள் முடிவுற்ற நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பிறகு இவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

மேலும்,உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து கைரேகைப்பதிவு ஒப்புதல் சான்றிதழைப் பெற்றவர்கள்,சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்துக்குள் ஓமனை விட்டு வெளியேற வேண்டும்.இது தொடர்பான தகவல்களை ஏமனிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் பெறமுடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,பாஸ்போர்ட் இல்லாதவர்கள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சான்றிதழ் பெற விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக தூதரகத்தைத் தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்: on "சட்டத்திற்குப் புறம்பாக தங்கியுள்ள இந்தியர்கள் கைரேகையை பதிவு செய்ய ஓமன் அமைச்சகம் உத்தரவு"
கருத்துரையிடுக