8 மே, 2010

பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகள்

லண்டன்:பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதாக இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மொத்தமுள்ள 650 நாடாளுமன்றத் தொகுதிகளில் 621 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதிக இடங்கள் பெற்ற கட்சியாக கன்சர்வேடிவ் கட்சி விளங்குகிறது. அக்கட்சி 295 இடங்களை இதுவரை பெற்றுள்ளது.

ஆட்சியிலுள்ள தொழிற்கட்சி இதுவரை 251 ஆசனங்களைப் பெற்றுள்ளது. சென்ற முறை தேர்தலில் அக்கட்சி பெற்ற இடங்களோடு ஒப்பிடுகையில் அக்கட்சி 85க்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளது.

மூன்றாவது நிலையில் உள்ள லிபரல் டெமாக்கிரடிக் கட்சி 52 இடங்களைப் பெற்றுள்ளது. ஏனைய கட்சிகளும் சுயேட்சைகளுமாக 27 ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.

1974ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொங்கு நாடாளுமன்றம் அமையவிருப்பதாகத் தெரிகிறது.

எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையில், எக்கட்சிகள் இடையில் கூட்டணி ஆட்சி ஏற்படும், யார் பிரதமராக வருவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகள்"

கருத்துரையிடுக