புதுடெல்லி:மாவோயிஸ்ட்களை ஆதரிப்போருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாவோயிஸ்ட் தலைவர்கள் சிலர், சில தன்னார்வ குழுக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து மாவோயிஸ்டு சித்தாந்தங்களை பரப்பவும், அவர்களது வழியை பின்பற்றவும் வற்புறுத்தியதாக வந்த செய்திகளை அடுத்து இத்தகைய உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
மாவோயிஸ்ட்கள் விரிக்கும் வலையில் பொதுமக்கள் வீழ்ந்து விடக்கூடாது. அவ்வாறு மாவோயிஸ்ட்களை ஆதரிப்போர் மற்றும் அவர்களுக்கு துணைபுரிவோர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 1967-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம் குற்றம் சாட்டப்படுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source:Dinamani

0 கருத்துகள்: on "மாவோயிஸ்டுகளை ஆதரித்தால் 10 ஆண்டு சிறை"
கருத்துரையிடுக