மாஸ்கோ:சோவியத் யூனியனின் சர்வாதிகாரியாக இருந்த ஜோஸஃப் ஸ்டாலின் தனது ஆட்சிக் காலத்தில் தேசத்திற்கெதிராக நடத்திய கொடூரக் குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்க மக்களால் இயலாது என ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.
ஜோஸ்ஃப் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் ரஷ்ய அபிவிருத்தி அடைந்திருந்தாலும் மக்களின் மீது கொடூரங்களை ஏவியர்தான் ஸ்டாலின். இவ்விஷயத்தில் மக்களுக்கு அவரை மன்னிக்க இயலாது என இரண்டாம் உலகப்போரின் 65-வது நினைவுத் தினக் கொண்டாடவிருக்கின்ற வேளையில் இஸ்வெஸ்ஸியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மெத்வதேவ் இதனை தெரிவித்தார்.
ஸ்டாலினின் கொடூரங்களுக்கெதிராக நிகிட்டா க்ரூஷ்கேவ் 1956 இல் பிரச்சாரத்தை துவக்கியிருந்தார். சோவியத் யூனியனின் வரலாற்றில் ஸ்டாலினின் பங்கைக் குறித்த விவாதம் தற்பொழுது ரஷ்யாவில் சூடுபிடித்துள்ளது.
நாளை இரண்டாம் உலகப்போர் நினைவுதினம் கொண்டாடப்படுகிறது. "ரஷ்யாவின் வெற்றிக்கு ஸ்டாலினும், ராணுவமும் மட்டும் காரணமல்ல எனவும், தேசத்திற்காக உயிரைத் தியாகம் செய்த ஏராளமான குடிமக்களும் தான்” என மெத்வதேவ் கூறுகிறார்.
மக்களுக்கு ஸ்டாலினை விரும்பவோ அல்லது வெறுக்கவோ செய்யலாம், ஆனால் மக்களுக்கெதிராக கொடூரங்களை கட்டவிழ்த்து விட்டவர் ஸ்டாலின் என்பதுதான் தேசத்தின் நிலைப்பாடு என மெத்வதேவ் தெரிவிக்கிறார். கடின் காட்டில் வைத்து 20 ஆயிரம் போலந்து ராணுவத்தினரை கூட்டுப் படுகொலைச் செய்ய ஸ்டாலின் உத்தரவிட்டார் என்பதற்கான ரகசிய ஆதாரத்தை மெத்வதேவ் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஸ்டாலின் கொடூரங்களுக்கு மன்னிப்பு இல்லை: ரஷ்ய அதிபர்"
கருத்துரையிடுக