லண்டன்:பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான லேபர் கட்சி வீழ்ச்சியை சந்தித்துள்ளது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கன்ஸர்வேடிவ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
பிரிட்டனின் மொத்தம் 650 பாராளுமன்றத் தொகுதிகளில் 306 தொகுதிகளைப் பெற்று கன்ஸர்வேடிவ் கட்சி முதலிடத்தில் உள்ளது.
258 தொகுதிகளில் வெற்றிப் பெற்று இரண்டாவது இடத்தில் லேபர் கட்சி உள்ளது. லிபரல் டெமோக்ரேடிக் கட்சிக்கும் 57 இடங்கள் கிடைத்துள்ளன. லிபரல் டெமோக்ரேடிக் கட்சி ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அதிக இடங்களைப் பெற்றுள்ள கட்சியை ஆதரிக்கப் போவதாக இக்கட்சி அறிவித்துள்ளது. இதனால் கன்ஸர்வேடிவ் கட்சிக்கு 346 தொகுதி ஆகும். பெரும்பான்மைக்கு 326 தொகுதி தேவை.
பிரிட்டனின் சட்டப்படி முதலில் பிரதமராகயிருக்கும் கார்டன் பிரவுன் ஆட்சியமைக்க அழைக்கப்படுவார். அவர் பெரும்பான்மையை நிரூபிக்காத பட்சத்தில் ராஜினாமாச் செய்ய வேண்டும். தொடர்ந்து அதிகம் இடம்பெற்றுள்ள கட்சி அழைக்கப்படும். பிரதிநிதி சபையில் பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சியமைக்க அனுமதி கிடைக்கும்.
ஆட்சியமைக்கும் முயற்சியாக கன்ஸர்வேடிவ் கட்சியின் தலைவர் ஜேம்ஸ் காமரூன் பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் அமைந்துள்ள டவுணிங் ஸ்டீரிட்டுக்கு வருகைப் புரிந்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பிரிட்டனில் தொங்கு பாராளுமன்றம் - ஆட்சியமைக்க காமரூன் தீவிரம்"
கருத்துரையிடுக