8 மே, 2010

சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம்: ஷா ஃபைஸலுக்கு குவியும் வாழ்த்துக்கள்

ஸ்ரீநகர்:இந்திய சிவில் சர்வீஸின் உயர்தர ஆட்சிப் பணிக்கான தேர்வில் முதல் முயற்சியிலேயே (First attempt) இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து சாதனைப் படைத்த கஷ்மீரைச் சார்ந்த இளம் டாக்டர் ஷா ஃபைஸலுக்கு கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கஷ்மீர் இளைஞர்களுக்கு ஷா ஃபைஸல் வழிகாட்டி என கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த தேசத்தில் கஷ்மீரிகள் ஒரு காரியத்திலும் இரண்டாவது இடத்தில் இல்லை என்பதை ஃபைஸல் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், முன்னாள் கஷ்மீர் முதல்வருமான குலாம் நபி ஆசாத், கஷ்மீர் பல்கலைக்கழக துணைவேந்தர் ரியாஸ் பஞ்சாபி, பி.டி.பி தலைவரும், முன்னாள் முதல்வருமான முஃப்தி முஹம்மது சயீத், அவருடைய மகள் மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் ஷா ஃபைஸலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற 875 பேரில் 21 பேர் முஸ்லிம்களாவர். 4 முஸ்லிம்கள் முதல் 100 இடத்திற்குள் வந்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம்: ஷா ஃபைஸலுக்கு குவியும் வாழ்த்துக்கள்"

கருத்துரையிடுக