ராமல்லா:ஃபலஸ்தீன்-இஸ்ரேலுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை துவங்கவிருப்பதாக ஃபலஸ்தீனீன் முக்கிய மத்தியஸ்தரான ஸாஈப் எராகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மேற்காசிய பிரதிநிதி ஜார்ஜ் மிச்சல், ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரை சந்தித்த பிறகு எராகத் இதனை தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு ஜார்ஜ் மிச்சல் மத்தியஸ்தராக இருப்பார். கிழக்கு ஜெருசலத்தில் இஸ்ரேல் புதிய குடியேற்ற வீடுகளை நிர்மாணிப்பதைத் தொடர்ந்து கடந்த மார்ச்சில் இரு நாடுகளுக்கிடையேயான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை துவங்காமலிருந்தது.
2008 ஆம் ஆண்டு ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூரத்தாக்குதல்களைத் தொடர்ந்து ஃபலஸ்தீன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவந்தது.
ஃபலஸ்தீன் அதாரிட்டி அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனும், பெஞ்சமின் நெதன்யாகுவுடனும் மிச்சல் கடந்த வாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவங்க ஃபலஸ்தீன் விடுதலை இயக்கம்(P.L.O) நேற்று முன்தினம் ஆதரவு தெரிவித்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன்-இஸ்ரேல் பேச்சுவார்த்தை துவங்குகிறது"
கருத்துரையிடுக