22 மே, 2010

அமெரிக்காவுக்கு தெரிந்தே தலிபான்களுடன் மாலத்தீவில் நடந்த பேச்சுவார்த்தை

வாஷிங்டன்:மாலத்தீவில் மீண்டும் ஆப்கான் அரசு பிரதிநிதிகளும், தாலிபான் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதில் அரசியல் பார்வையாளர்களும் கலந்துக்கொண்டனர். 45 பேர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். ஆப்கானிஸ்தானில் பிரபல அரசியல் கட்சியின் தலைவர்களும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் ஹிஸ்பே இஸ்லாமியின் தலைவர் குதுபுத்தீன் ஹெக்மத்தியாரின் மருமகன் ஜரீர் ஹெக்மத்தியார்தான் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடுச் செய்தார்.

ஹெக்மத்தியாருக்கு பதிலாக அவருடைய மகன் பிரோஸ் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டார்.

மாலத்தீவில் பேச்சுவார்த்தை நடப்பதை ஆப்கான் அதிபர் கர்ஸாயி அதிகாரப்பூர்வமாக தெரிவித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பி.ஜெ.க்ரவ்லி பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கவில்லை. ஆனால் இவர்களை பிரதிநிதித்துவப்படுத்த அரசியல் பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

'ஆப்கானில் தாக்குதலை குறைப்பதற்கும், ஸ்திரத்தன்மையை மீண்டும் கொண்டுவர தேவையான இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிதான் இந்த பேச்சுவார்த்தை என்றும் அவர் கூறினார்.

இது சரியான நடவடிக்கையா? என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு, விவாதத்திற்கு காரணமான பிரச்சனைகளும், அதன் பரிகாரமும் தான் முக்கியம்' என க்ரவுலி தெரிவித்தார்.

இது இரண்டாவது தடவையாக தாலிபானுடன் ஆப்கான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கடந்த ஜனவரியில் நடந்த பேச்சுவார்த்தையின் தீர்மானத்தில் மாற்றமிருந்தாலும், அரசுடன் ஒத்துழைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.

மிதவாதிகளான தாலிபான் தலைவர்களை ஆட்சியில் பங்கேற்கச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா அங்கீகரித்திருந்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடந்துவரும் ஆப்கான் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றுதான் இணக்கம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்காவுக்கு தெரிந்தே தலிபான்களுடன் மாலத்தீவில் நடந்த பேச்சுவார்த்தை"

கருத்துரையிடுக