22 மே, 2010

குஜராத்:போலி எண்கவுண்டர் கொலை வழக்கில் CBI-யின் நிலையான,நீதிவிசாரணையை உறுதிபடுத்த வேண்டும். இந்தியன் முஸ்லிம் கவுன்ஸில் -USA

குஜராத் போலி எண்கவுண்டர் கொலை வழக்கில் CBI-யின் நிலையான, பயமற்ற நீதிவிசரணையை உறுதிபடுத்த வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி கபாடியாவிடமும் இந்தியன் முஸ்லிம் கவுன்ஸில் USA கேட்டுக் கொண்டுள்ளது (IMC-USA).

குஜராத் போலி எண்கவுண்டர் கொலை தொடர்பாக 15 காவல்துறை உயர் அதிகாரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது இந்த போலி எண்கவுண்டரில் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் உள்ள அமைச்சர்கள் மீது விசாரணை மேற்கொள்ள CBI-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

CBI-யின் விசாரணையை நிலையற்றதாக ஆக்கவும், திசை திருப்பவும் CBI மேற்கொள்ளும் விசாரணையை பல விதமான பொய்யான செய்திகளுடனும், தலைப்புகளுடனும் பெரிய அளவிலான பிரச்சாரங்களையும, விளம்பரங்களையும் குஜராத்தி ஊடகங்கள் பெயர் தெரியாத குழுக்கள் மூலம் செய்து வருகின்றன.

பிரதமமந்திரி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு தனியாக அனுப்பப்பட்ட கடிதத்தில் IMC-USA பிரசிடெண்ட் ரஷீத் அஹமது கூறுகிறார். "இத்தகைய போலி பிரச்சாரக் குழுக்களின் நோக்கம் CBI-ன் விசாரணைக்கு அரசியல் சாயம் பூசுவதும் அதன் மூலம் CBI-ன் நியாயமான விசாரணையை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சாதகமற்ற சூழ்நிலைகளை உருவாக்கி இறுதியில் நீதி கிடைப்பதற்கு தடை ஏற்படுத்துவதுமாகும்". மேலும் அவர் கூறுகையில் "முதல் முறையாக CBI போலி எண்கவுண்டர் வழக்கில் நேர்மையான விசாரணையை மேற்கொண்டுள்ளது.

இதன் தாக்கம் குஜராத்தில் சிறுபான்மை மக்களின் அழித்தொழிப்பில் ஈடுபட்ட நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் உள்ள அரசியல் மற்றும் அதிகார குற்றப் பரம்பரையினரை வெளிக்கொண்டு வர நேரான விசாரணை வேண்டும்.

நீதி விசாரணையை நிலைகுலைய செய்யவும் போலியான விளம்பரங்கள் மற்றும் பொய் பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களின் கருத்தினை நீதிக்கு மாறானதாக திணிக்கும் இத்தகைய பெயர் தெரியாத குழுக்கள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் அடிப்படையான பாதுகாப்பும், சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும் இல்லாமல் எத்தகைய வளர்ச்சியும் இல்லை. பொருளாதார நிலையில் வளர்ச்சியும் இழப்பும் ஏற்பட்டாலும் உலகத்தரம் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் அதனால் எவ்வித பயன்பாடும் இல்லை" என்றார்.

இந்தியன் முஸ்லிம் கவுன்ஸில் -USA பெரிய அளவிலான அமெரிக்க இந்தியன் முஸ்லிம்களுக்கான ஓர் அமைப்பாகும், இது தேசிய அளவில் பத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் செயல்படுகிறது.

குஜராத் 2002 முஸ்லிம்கள் இனப்படுகொலையில் நரேந்திர மோடி மற்றும் அரசியல் நிர்வாக பயங்கரவாதிகளின் பங்கினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததன் மூலம் இனப்படுகொலைகளுக்கு எதிரான ஒரு உறுப்பினர் இயக்கமாகவும் உள்ளது. நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதற்கு எதிராக பங்காற்றிய நரேந்திர மோடியின் அனுமதிச்சீட்டை (visa) ரத்து செய்ய அமெரிக்க அரசை நிர்பந்தித்தலில் முக்கிய பங்காற்றியது இந்தியன் முஸ்லிம் கவுன்ஸில் -USA ஆகும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத்:போலி எண்கவுண்டர் கொலை வழக்கில் CBI-யின் நிலையான,நீதிவிசாரணையை உறுதிபடுத்த வேண்டும். இந்தியன் முஸ்லிம் கவுன்ஸில் -USA"

கருத்துரையிடுக