23 மே, 2010

'அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்'- மங்களூர் விமான விபத்திலிருந்து தப்பிய மாஹீன் குட்டியின் குடும்பத்தினர்

கண்ணூர்:மங்களூர் விமான விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவர் மாஹீன் குட்டி. இச்செய்தியைக் கேட்டு அவருடைய குடும்பத்தினரும், ஊராரும் ஆசுவாசமடைந்தனர்.

ஏராளமான உயிர்கள் மரணமடைவதற்கு காரணமான விபத்திலிருந்து மாஹீன் குட்டி தப்பிப் பிழைத்தற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றனர் அவருடைய குடும்பத்தினர்.

'அல்லாஹ்வை எவ்வளவு தடவை புகழ்ந்தாலும் போதாது. விமான விபத்திலிருந்து தப்பியவுடன் வாப்பா என்னை அழைத்திருந்தார்’ எனக்கூறுகிறார் அவருடைய மகன் முனவ்விர்.

பெரிய காயங்கள் ஒன்றுமில்லாததால் மாஹீன்குட்டி அடிப்படையான சிகிட்சை முடிந்தவுடன் இன்று தனது சொந்த ஊருக்கு திரும்புவார். விமானவிபத்து நடந்தவுடன் அவருடைய குடும்பத்தினர் பீதிவயப்பட்டனர். அவர் தப்பிவிட்டார் என்ற செய்தி காலம் தாழ்ந்தே கிடைத்தது.

ஷார்ஜாவில் வியாபரம் செய்துவரும் மாஹீன் குட்டி குடும்பத்தினருடன் சிறிது நாட்களை கழிப்பதற்காக சொந்த ஊருக்கு பயணம் புறப்பட்டார். விமானத்தில் மாஹீன்குட்டிக்கு 23 ஆம் நம்பர் சீட்டாகும். இது விமானத்தின் நடுப்பகுதியிலாகும். விமானம் மங்களூர் விமானநிலையத்தின் ரன்வேயைத் தொட்டவுடனேயே விமானத்திலிருந்து புகைக் கிளம்பியுள்ளது.

விமானம் தகர்ந்தவுடனே ஏற்பட்ட பிளவின் இடைவெளியின் வழியாக மாஹீன் குட்டி வெளியே குதித்துவிட்டார். மாஹீன் குட்டி வெளியேக் குதித்தவுடனேயே விமானத்தை தீ விழுங்கியது.

வெளியே வந்த மாஹீன் குட்டி ஒரு கிலோ மீட்டர் தூரம் காட்டில் ஓடிய அவரை விபத்துச் செய்தியை கேள்விப்பட்டு வந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விமானம் ரன்வேயை தொட்டவுடன் மதிலிலோ அல்லது கட்டிடத்திலோ இடித்திருக்கலாம் என மாஹீன் குட்டி சந்தேகிக்கிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்'- மங்களூர் விமான விபத்திலிருந்து தப்பிய மாஹீன் குட்டியின் குடும்பத்தினர்"

கருத்துரையிடுக