23 மே, 2010

போயிங் 737-800 அதாவது விமானங்களின் மாருதி 800

புதுடெல்லி:லேண்ட் செய்ய குறைந்த இடம் போதுமானது என்பதுதான் போயிங் 737 விமானத்தின் தனித்தன்மை.

தடிமானம் குறைந்த வெளிப்புற அமைப்பைக் கொண்ட போயிங் விமானங்களை செலவுக் குறைந்த விமானங்களின் பட்டியலில் விமான போக்குவரத்து உலகம் உட்படுத்தியுள்ளது.


மங்களூரில் விபத்திற்குள்ளான போயிங் 737-800 விமானம் புதிய மாடலில் உட்பட்டதாகும். 737-900 விமானம் போயிங் விமானங்களில் மிகவும் புதிய மாடலாகும்.

அமெரிக்காவின் கொனேர்சியல் ஏர்ப்ளைன்ஸ் கம்பெனிதான் போயிங் விமானங்களின் தயாரிப்பாளர்கள். 1964 ஆம் ஆண்டு உருவாக்கம் துவங்கப்பட்ட போயிங் 737 விமானம் 1967ஆம் ஆண்டு முதன் முதலில் பறக்கத் துவங்கியது.

கார்களுக்கு இடையே மாருதி 800 போல் விற்பனைக்கு சந்தைக்கு வந்தவுடனேயே பிரசித்திப்பெற ஆரம்பித்தது. அமெரிக்க ஏர்லைன்ஸ் இவ்வகையான விமானங்களுக்கு ஆர்டர் அளித்ததால் விமான தயாரிப்பாளர்கள் அதிக அளவிலான போயிங் விமானத்தை தயாரிக்க துவங்கினர். இவ்வாறு புதிய காலக்கட்டத்தின் தேவையை உணர்ந்து போயிங் 737 இன் 700,800,900 என மாடல்கள் உருவானது.

புதிய மாடல்களின் சிறகுகள் புதிய முறையில் தயாரிக்கப்பட்டன. பழைய மாடல்களை விட தற்போதைய விமானத்தின் சிறகுகள் 25% தடிமானம் குறைந்தவை. இவ்விமானங்களின் எரிபொருள் தேவையும் குறைவாகும். இரண்டு வகுப்புகளில் 162 பேரை உட்கொள்ளும் வசதியைக் கொண்டது இவ்விமானம்.

எரிபொருளை குறைத்து செலவழித்தால் போதும் என்பதும் இவ்விமானம் சிறப்புற காரணமாகும். 80 களில் எம்.டி விமானக்கம்பெனி போயிங்குடன் இணைந்தது. அப்பொழுது பல ஏர்லைன்சுகளும் எம்.டி விமானங்களை திரும்ப அளித்து போயிங் விமானங்களை வாங்க துவங்கின. ஆனால் சர்ச்சைகளிலிருந்தும் போயிங் தப்பவில்லை.

1994 ஆம் ஆண்டிற்கும் 2002 ஆம் ஆண்டிற்கும் இடையே மோசமான பார்ட்ஸ்களை பயன்படுத்தி போயிங் விமானங்கள் தயாரிக்கப்பட்டதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது. கம்பெனிக்கு இது தெரிய வந்த பிறகும் தனது பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஸ்கை நியூஸ் கூறியது. ஆனால் இது அடிப்படையற்ற செய்தி என போயிங் மறுத்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போயிங் 737-800 அதாவது விமானங்களின் மாருதி 800"

கருத்துரையிடுக