23 மே, 2010

கஷ்மீரில் முஸ்லிம் பெரும்பான்மையை தகர்க்க சென்ஸசில் திருட்டுத்தனம்- கிலானி குற்றச்சாட்டு

புதுடெல்லி:'கஷ்மீரில் வசிக்காதவர்களையெல்லாம் மக்கள் தொகை கணக்கெடுப்பில் உட்படுத்தியது ஜம்மு கஷ்மீரில் முஸ்லிம் மக்களின் பெரும்பானமையை தகர்ப்பதற்கான சதி' என ஹுரியத் கான்ஃப்ரன்ஸ் தலைவர் செய்யத் அலிஷா கிலானி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்சஸில் தேவையில்லாமல் தலையிடுவதாகவும், இதற்காக மாநிலத்திற்கு வெளியேயிருந்து சென்சஸ் பணிக்கு அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

'கஷ்மீரில் வசிக்காதவர்களையெல்லாம் சென்சஸில் உட்படுத்தினால் கஷ்மீரில் முஸ்லிம்கள் சிறுபான்மையாகிவிடுவர். இதற்கெதிராக முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். முஸ்லிம்களின் குடிமகன் கட்டத்தில் கஷ்மீர் முஸ்லிம் என்றுதான் குறிப்பிட வேண்டும்.

கஷ்மீர் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு கேட்டை உருவாக்கும் விதமாக தயாரிக்கப்பட்ட இண்டர்-டிஸ்ட்ரிக்ட் ரிக்ரூட்மெண்ட் மசோதாவும் இதேரீதியான சதித்திட்டமாகும்.

அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு 8 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் இம்மசோதா கஷ்மீரில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கஷ்மீரில் கில்ஜித்தா, பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் சுய நிர்ணய உரிமையை விட குறைந்த எந்த ஃபார்முலாவும் தேவையில்லை.

ராணுவம் தான் மாநிலத்தின் சூழலை கெடுக்கிறது. ராணுவத்தை முற்றிலும் வாபஸ் பெறாமல் சமாதானத்திற்கு வாய்ப்பில்லை. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பி.எஸ்.எ போன்ற கறுப்புச் சட்டங்களின் மூலம் சிறையிலடைக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களை விடுதலைச் செய்யவேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவைக்கூட அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர்'. இவ்வாறு கிலானி கூறுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீரில் முஸ்லிம் பெரும்பான்மையை தகர்க்க சென்ஸசில் திருட்டுத்தனம்- கிலானி குற்றச்சாட்டு"

கருத்துரையிடுக