27 மே, 2010

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியை மாற்றும் பொழுது குடும்ப விசாவை மாற்றத் தேவையில்லை

துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியை ஏற்கனவே பணிபுரிந்து வரும் கம்பெனியிலிருந்து வேறொரு கம்பெனிக்கு பணிக்காக மாறும் பொழுது அவருடைய குடும்பவிசாவை மாற்றத் தேவையில்லை.

முன்பு ஒருவர் தான் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனத்திலிருந்து மாறினால் அவருடைய குடும்ப விசாவையும் மாற்றவேண்டும் என்ற சட்டம் இருந்தது.

தற்பொழுது அதற்கு பதிலாக குடும்பத் தலைவர் சொந்த விசாவை ரத்துச் செய்யும் முன்பு ஒரு சிறப்பு மனுவை அளிக்கவேண்டும். அத்துடன் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 5000 திர்ஹம்ஸ் வீதம் வங்கி உத்திரவாதம்(Bank guarantee) வழங்க வேண்டும்.

வேறு சிறப்புக்கட்டணம் ஒன்றும் தேவையில்லை.விசா மாற்றி அளிக்கப்படும்.வங்கி உத்தரவாதமாக செலுத்திய பணமும் திருப்பி அளிக்கப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியை மாற்றும் பொழுது குடும்ப விசாவை மாற்றத் தேவையில்லை"

கருத்துரையிடுக