27 மே, 2010

புனே குண்டுவெடிப்பு:அப்துல் ஸமதிற்கெதிராக ஆதாரமில்லாமல் இருட்டில் துளாவும் ஏ.டி.எஸ்

புதுடெல்லி:புனே குண்டுவெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்ட மங்களூரைச் சார்ந்த அப்துஸ்ஸமது சிந்திபாவாவுக்கெதிராக ஆதாரங்கள் கிடைக்காமல் போலீஸார் இருட்டில் துளாவுகின்றனர்.

துபாயிலிருந்து மங்களூர் விமானநிலையத்திற்கு வந்திறங்கிய அப்துஸ்ஸமதை கைது செய்த மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையினரை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டியிருந்தார்.

ஆனால் புனே குண்டுவெடிப்புக்குத் தொடர்பில்லாத குற்றங்களைத்தான் போலீசார் மும்பை மாஜிஸ்ட்ரேடிடம் சமர்ப்பித்துள்ளனர்.

மும்பையில் பைக்குகளிலிருந்து சிறிய ஆயுதங்களை கைப்பற்றியதுத் தொடர்பாக அப்துஸ்ஸமதை விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் போலீசார் கோரியுள்ளனர்.

தொடர் குண்டுவெடிப்பில் குற்றவாளிகளான அபினவ் பாரத்தின் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்க உறுப்பினர்களின் வழக்கறிஞர்களை தாக்குவதற்குதான் ஆயுதங்களை கொண்டுவந்தது என்று போலீஸ் சந்தேகத்தை தெரிவிக்கிறது.

இதுவரை புனே குண்டுவெடிப்புத் தொடர்பாக அப்துஸ்ஸமதிற்கெதிராக ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என போலீசார் கூறுகின்றனர்.

புனே குண்டுவெடிப்பு நடைபெறும் பொழுது அப்துஸ்ஸமது ஊரில் ஒரு திருமணத்தில் கலந்துக் கொண்டிருந்தார் என அவருடைய வீட்டார் கூறுகின்றனர்.

இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்புடன் தொடர்புடைய நபராக குற்றஞ்சாட்டப்படும் அப்துஸ்ஸமதின் சகோதரன் முஹம்மது ஸரர்தான் புனே குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் பேக்கரியிலிலுள்ள கேமராவில் பதிந்தது அப்துஸ்ஸமதின் முகம் என ஒரு சாட்சிக் கூறியதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

அப்துஸ்ஸமது பிப்ரவரி 26ஆம் தேதி துபாய்க்கு சென்றது முழுமையான பயண ஆவணங்களுடன்தான் என்பதால் அவருக்கு ரகசியத் திட்டங்கள் ஒன்றுமில்லை என்பதற்கு இது ஆதாரமாகும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புனே குண்டுவெடிப்பு:அப்துல் ஸமதிற்கெதிராக ஆதாரமில்லாமல் இருட்டில் துளாவும் ஏ.டி.எஸ்"

கருத்துரையிடுக