26 மே, 2010

அரசுப் பள்ளியில் படித்து முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது

தமிழகத்தின் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்த நெல்லை அரசுப் பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூது வீடுகளுக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.அம்மா நூர்ஜகான்,சகோதரர்கள் இம்ரான் இப்ராகிம், இர்பான்.

இவர்கள் திருநெல்வேலி டவுண்,கல்லணைத் தெருவில் வசித்து வருகின்றனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தது குறித்து மாணவி ஜாஸ்மின் கூறும்போது;"மாநில அளவில் முதலிடம் பிடித்ததற்கு இறைவனின் உதவியும்,எனது பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் எனது பெற்றோர்கள் கொடுத்த ஊக்கமே அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு காரணம்.அதிக பணம் அளித்து பெரிய பள்ளியில் படிக்காமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து, வெற்றி பெற்றது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

எனது அடுத்த முயற்சி ஐஏஎஸ் படித்து ஏழை, எளிய மக்களுக்கும், பொது மக்களுக்கும் சேவை செய்வதே நோக்கமாகும்" என்று தெரிவித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "அரசுப் பள்ளியில் படித்து முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது"

Flint சொன்னது…

ماشا الله

கருத்துரையிடுக