26 மே, 2010

மத்திய ஆசியாவில் ரகசிய ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க ராணுவத்தளபதி உத்தரவு

வாஷிங்டன்:நேரடியான ராணுவத் தாக்குதலுக்கு பலன் கிடைக்காத சூழலில் மத்திய ஆசியாவில் ரகசிய ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க ராணுவத்தளபதி டேவிட் பெட்ரோஸ் உத்தரவிட்டுள்ளார்.

ஈரான்,சவூதி அரேபியா, யெமன், சோமாலியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் அச்சுறுத்தல்கள் அமெரிக்காவின் தூக்கத்தை கெடுக்கிறது. மத்தியா ஆசியா,மேற்காசியா,ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளிலிலுள்ள நட்பு நாடுகளிலும், எதிரிநாடுகளிலும் ரகசிய ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார் டேவிட் பெட்ரோஸ்.

இதுத்தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் அவர் கையெழுத்திட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் எதிர்ப்பு பிரிவினர்,பாதுகாப்பு படையினர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதும், ரகசிய விபரங்களை சேகரிப்பதும்தான் இவர்களின் வேலை.
அணுசக்தி விவகாரத்தில் ஈரானுக்கெதிராக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேவையான விபரங்களை சேகரிப்பதற்கும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

போர்க்களத்திற்கு வெளியேயுள்ள பிரதேசங்களில் சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கைக்கு புஷ் நிர்வாகம் முன்பு உத்தரவிட்டிருந்தது. அதனை பரவலாக்கத்தான் பெட்ரோ தனது உத்தரவில் கூறுகிறார்.

அல்காயிதா போன்ற போராளி இயக்கங்களில் நுழைந்து தகர்ப்பதும், எதிர்காலத்தில் அமெரிக்காவின் மீது நடத்தவிருக்கும் தாக்குதல்களை முறியடிப்பதும்தான் இந்த ரகசிய ராணுவ நடவடிக்கையின் லட்சியமாகும்.

போதுமான அமெரிக்க ராணுவத்தின் ஆதிக்கம் இல்லாத நாடுகளில் ராணுவத்தின் ரகசிய நடவடிக்கைகளை வலுப்படுத்த சி.ஐ.ஏ போன்ற ரகசிய உளவு நிறுவனங்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்கு அமெரிக்க ராணுவம் தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவின் பல நட்பு நாடுகளிலும் போராளி இயக்கங்கள் வளர்ந்துவரும் சூழலிலும், ஈரான் போன்ற எதிரிநாடுகளில் வெளிப்படையான ராணுவ நடவடிக்கைக்கு முடியாத சூழலில்தான் ரகசிய ராணுவ நடவடிக்கைக்கு பெட்ரோஸ் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் சவூதி அரேபியா, யெமன் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகளை பெட்ரோஸின் உத்தரவு பிணக்கத்தை ஏற்படுத்துமா என்பதுக் குறித்து பென்டகனுக்கு கவலையுண்டு.

அதைப்போல் ஈரான்,சிரியா போன்ற நாடுகளை கோபத்திற்கு ஆளாக்கவும் வாய்ப்பு உள்ளது.

ரகசிய ராணுவப் பிரிவினர் கைது செய்யப்பட்டால் ரகசிய உளவாளிகளாகத்தான் கருதப்படுவர் என்பதால் ஜெனீவா ஒப்பந்தத்தின் அடிப்படையிலான ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு அவர்களுக்கு கிடைக்காது என்பதும் அமெரிக்க அதிகாரிகளை கவலைகொள்ள செய்துள்ளது.

ரகசிய ராணுவப்பிரிவின் நடவடிக்கைகள் ரகசியமானதால் அதுக்குறித்த விளக்கங்களை அளிக்க வெள்ளைமாளிகை,பெண்டகன் செய்தித் தொடர்பாளர்கள் மறுத்துவிட்டனர்.

ஈரானில் அணுசக்தித்திட்டம் குறித்த விபரங்களை சேகரிக்கவும், எதிர்காலத்தில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் பொழுது அப்பொழுது பயன்படுத்துவதற்குரிய எதிர் பிரிவினரை கண்டறியவும் ஏழு பக்கங்களைக் கொண்ட உத்தரவில் பெட்ரோஸ் கூறுகிறார்.

ஜோயிண்ட் அண்ட் கன்வன்சனல் வார்ஃபேர் டாஸ்க் ஃபோர்ஸ் எக்ஸ்க்யூடிவ் ஆர்டர் என்ற பெயர் கொண்ட உத்தரவில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பெட்ரோஸ் கையெழுத்திட்டுள்ளார்.

இதனடிப்படையில் கையெழுத்திட்ட 3மாதத்திற்கு பிறகு யெமனில் அமெரிக்கா ராணுவநடவடிக்கையை வலுப்படுத்தியது. யெமன் நாட்டு ராணுவத்துடன் இணந்துதான் அங்கு அமெரிக்க ஸ்பெஷல் ஆபரேசன் ராணுவத்தினர் செயல்படுகின்றனர்.

சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் போர்க்கப்பல்களிலிருந்து போராளிகளின் முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களும் நடைபெறுகின்றன. யெமன் ராணுவத்திற்கு அதிகளவிலான நவீன ஆயுதங்களும், உபகரணங்களும் வாங்குவதற்கு 15 கோடியே 50 லட்சம் டாலர் நிதியுதவியை அமெரிக்கா யெமனுக்கு அளித்துள்ளது.

சி.ஐ.ஏவின் நடவடிக்கைகளுக்கு அதிபரின் உத்தரவு கிடைத்து தொடர்ந்து அமெரிக்க காங்கிரஸுக்கு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும்.ஆனால் ராணுவத்தின் ரகசிய நடவடிக்கைகள் குறித்து இத்தகைய சம்பிரதாயங்கள் ஒன்றுமில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மத்திய ஆசியாவில் ரகசிய ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க ராணுவத்தளபதி உத்தரவு"

கருத்துரையிடுக