டெல்அவீவ்:மூத்த ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல் மப்ஹூஹ் கடந்த ஜனவரி மாதம் துபாயில் கொல்லப்பட்ட வழக்கில் பங்காற்றிய மொசாத் ஏஜண்டுகள் 4 பேர் ஆஸ்திரேலிய நாட்டின் பாஸ்போர்ட்டை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா நாட்டு போலீஸ் இஸ்ரேல் சென்று விசாரணை மேற்கொண்டது. ஆனால் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என கடந்த ஏப்ரல் மாதம் அறிக்கையளித்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் உளவுத்துறை தலைவர் டேவிட் இர்வின் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். இர்வின் இஸ்ரேல் பயணத்தின் போது ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டை இஸ்ரேல் மப்ஹூஹை கொலை செய்ய போலியாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.
இதுத்தொடர்பான அறிக்கையை ஆஸ்திரேலியா ரகசிய புலனாய்வுத்துறை இந்த மாதம் 19 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. ஆஸ்திரேலிய நாட்டு பாஸ்போர்ட்டை மட்டுமல்ல இஸ்ரேல் போலியாக பயன்படுத்தியது என்றும், ஃபோட்டோவை மாற்றுவதில் கில்லாடியான நபர்கள்தான் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இர்வின் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டுகிறார்.
அரசு உளவுத்துறையால் மட்டுமே இது சாத்தியம் எனவும் இர்வின் கூறுகிறார்.மப்ஹூஹ் கொலையில் இஸ்ரேல் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டை பயன்படுத்தியது உறுதியான நிலையில்தான் நேற்று முன்தினம் இஸ்ரேலிய தூதரக அதிகாரியை ஆஸ்திரேலியா நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹமாஸ் தலைவர் கொலை:ஆஸ்திரேலிய உளவுத்துறை தலைவர் இஸ்ரேலுக்கு ரகசிய பயணம் மேற்க்கொண்டதாக தகவல்"
கருத்துரையிடுக