ஆனால் இதனை பிரதமர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் சீனா சென்றிருந்த மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய உள்துறை அமைச்சகத்தைப் பற்றி விமர்சித்தார்.
சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்து இருப்பதை மறைமுகமாக குறை கூறிய அவர், உள்துறை அமைச்சகம் அளவுக்கு மீறி தற்காப்பு உணர்வோடும், தேவையற்ற பீதியோடும் நடந்து கொள்ளவதாக குறிப்பிட்டார்.
அவர் இவ்வாறு கூறியது மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. உள்துறை அமைச்சகம் பற்றி ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்தது குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். மேலும் உள்துறை அமைச்சகத்தின் சார்பிலும் பிரதமரிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி சீனாவில் இருந்து டெல்லி திரும்பிய ஜெய்ராம் ரமேஷை பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பு கொண்டு, உள்துறை அமைச்சகம் பற்றி அவர் சீனாவில் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மற்ற அமைச்சகங்கள் செயல்படும் விதம் குறித்து மந்திரிசபை சகாக்கள் கருத்து தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் கூறினார்.
இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஜெய்ராம் ரமேஷை கண்டித்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பதவி விலக முன்வந்ததாகவும், அதனை பிரதமர் ஏற்க மறுத்து விட்டார் என்றும் பிரதமர் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளன.
thatstamil
0 கருத்துகள்: on "மத்திய உள்துறை அமைச்சகத்தைப் பற்றி விமர்சனம் செய்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ராஜினாமா: பிரதமர் ஏற்க மறுப்பு"
கருத்துரையிடுக