14 மே, 2010

என் மகனை பொறியில் சிக்கவைத்து விட்டார்கள்- ஸைஃபுர் ரஹ்மானின் தந்தை

இஸ்லாமாபாத்:தனது மகனை அமெரிக்க தூதரக அதிகாரிகள் சதித்திட்டம் தீட்டி பொறியில் சிக்கவைத்து விட்டார்கள் என சிலியில் அமெரிக்க தூதரகத்தில் கைதுச் செய்யப்பட்ட ஸைஃபுர் ரஹ்மானின் தந்தை கூறியுள்ளார்.

"எனது மகனை இனரீதியான தொந்தரவுக்கு ஆளாக்கியுள்ளனர். இச்சம்பவத்திற்கு பின்னணியில் சதித்திட்டம் உள்ளது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று பட்டம் பெற்ற ஸைஃபுர் ரஹ்மான் துணை படிப்பிற்காக சிலிக்கு கடந்த ஜனவரி மாதம் சென்றார்.

ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மெண்ட் படிப்பிற்காக அங்குள்ள பிரபல ஹோட்டலில் சேர்ந்தார். ஐந்துவருட கால அவகாசம் கொண்ட விசா அவரிடமிருந்தது. பில் என்பவர் அவரை அழைத்து அமெரிக்க தூதரகத்திற்கு செல்லுமாறு கூறியதாக ஸைஃபுர் ரஹ்மான் கடந்த வாரம் என்னிடம் கூறினார்.

சில காரியங்கள் பற்றிக் கேட்க வேண்டும் என்று அவர் கூறியதாக ஸைஃபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதனை சிலியில் பாகிஸ்தான் தூதரக மேலதிகாரியிடமும், ஹோட்டல் மானேஜரிடமும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனது ஆடைகளுடனும், பயண ஆவணங்கள் அடங்கிய பேக்குடனும் அமெரிக்க தூதரகத்திற்கு செல்லும் பொழுதான் வெடிப்பொருள் வைத்திருந்ததாக கூறி அவரை கைதுச் செய்துள்ளனர். இது முன்னரே தீட்டப்பட்ட திட்டமாகும்". இவ்வாறு ஸைஃபுர் ரஹ்மானின் தந்தை ரஹ்மான் கான் தெரிவித்தார்.

டைம்ஸ் சதுக்க தாக்குதல் திட்டத்திற்கு பின்னர் வெளிநாடுகளிலிலுள்ள பாகிஸ்தானிகளை அமெரிக்கா கண்காணித்து வருகிறது. இவர்களுக்கு விமான நிலையங்களில் கடுமையான சோதனைகளை சந்திக்கவேண்டி வருகிறது.

சாண்டியாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸைஃபுர் ரஹ்மானின் ரிமாண்ட் நீட்டப்பட்டுள்ளது. ஆனால் குற்றம் என்னவென்று இதுவரை தெரிவிக்கவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "என் மகனை பொறியில் சிக்கவைத்து விட்டார்கள்- ஸைஃபுர் ரஹ்மானின் தந்தை"

கருத்துரையிடுக