மாஸ்கோ:ஃபலஸ்தீன் போராளி இயக்கமான ஹமாஸுடன் ஒப்பந்தத்திற்கு தயாராக இஸ்ரேலுக்கு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் ஹமாஸின் தலைவர் காலித் மிஷ்அலுடன் நடந்த சந்திப்பிற்கு பின்னர் பேட்டியளித்த ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் தெரிவித்தார்.
ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸின் ஃபத்ஹ் கட்சியுடன் ஹமாஸ் இணைந்து பணியாற்ற மெத்வதேவ் கோரிக்கை விடுத்தார்.
2006 ஆம் ஆண்டு ஹமாஸால் கைதுச் செய்யப்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரன் கிலாத் ஷாலிதை ஹமாஸ் விடுவிக்கவேண்டுமென்று மெத்வதேவ் காலித் மிஷ்அலிடம் கூறியதாக அவருடைய செய்தித் தொடர்பாளர் நதாலியா திமாகோவா தெரிவித்தார்.
ஷாலிதின் விடுதலைக்கான பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் தடையாக இருக்கிறது என மிஷ்அல் குற்றஞ்சாட்டினார்.
சிரியாவின் அதிபர் பஸார்-அல்-அஸதையும் மெத்வதேவ் சந்தித்துப் பேசினார்.
அதேவேளையில், மெத்வதேவின் அறிக்கைக்கு எதிராக இஸ்ரேல் கருத்து தெரிவித்துள்ளது. செச்சனிய போராளிகளுக்கு எதிராக ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுதான் இஸ்ரேல் என இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
காலித் மிஷ்அலை செச்சனிய போராளித் தலைவர் ஸாமில் பஸயோவுடன் ஒப்பிட்ட இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாத அமைப்பு என குற்றஞ்சாட்டியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஹமாஸுடன் ஒப்பந்தத்திற்கு தயாராக இஸ்ரேலுக்கு ரஷ்யா கோரிக்கை"
கருத்துரையிடுக