11 மே, 2010

சமஉரிமை கிடைக்கும் சமூகமாக மாறும் வரை போராட்டம் தொடரும்: இ.எம்.அப்துற்றஹ்மான்

ஆலுவா(கேரளா):சம உரிமை கிடைக்கும் சமூகமாக மாறுவதற்கான போராட்டம் தொடரும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத்தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் ஆலுவா மணப்புறம் திப்புசுல்தான் நகரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரள மாநில தலைமை நிர்வாகிகள் பங்கேற்ற தலைமைத்துவ சங்கம நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார் இ.எம்.அப்துற்றஹ்மான்.

அவர் தனது உரையில்; "நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட இயக்கம் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இந்தியாவில் முஸ்லிம் சமுதாய வரலாற்றில் கேரள முஸ்லிம்களுக்கு தனித்தன்மையை வழங்கிவிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.

தனிமைப்படுத்துதல்,நீதிமறுப்பு, பாதுகாப்பின்மை ஆகிய சிக்கலான பிரச்சனைகளை சந்திக்கும் இந்திய முஸ்லிம்களுக்கு வழிகாட்ட ஒரு தலைவராலும் இயலவில்லை. சமுதாயத்தின் மேல்மட்டத்தில் சுயமாக தடுப்பை ஏற்படுத்திக் கொண்ட சமுதாய தலைவர்களுக்கு சவால்களை அடையாளம் காண்பதில் தோல்வியுற்று அவர்கள் டெல்லியிலும், இதர அலுவலகங்களிலும், மதரஸாக்களிலும் இருந்துக் கொண்டு நேரத்தை வீணடிக்கின்றனர்.

இந்திய முஸ்லிம்களுக்கு குஞ்ஞாலி மரைக்காயர் முதல் பஹதூர் ஷா வரையிலான தீரமிகு போராளிகளின் பாரம்பரியத்திற்கு பகரமாக கரியால் கொண்டு எழுதப்பட்ட நெருக்கடிகளின் கேள்விச் சின்னங்கள் தான் அவர்களின் முன்னால் உள்ளது.

பாசிசத்துடன் பசியும் முஸ்லிம்களுக்கு எதிரியாக மாறியுள்ளது. இந்திய முஸ்லிம்கள் தன்னம்பிக்கையை மீண்டும் பெறவேண்டும்" என்றார்.

விசாரதீரம் என்ற அழைக்கப்பட்ட இந்த தலைமைத்துவ சங்கமத்தில் கேரளமாநிலத்திலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் வி.பி.நாஸருத்தீன் தலைமை வகித்தார். இதில் தேசிய செயலாளர் எ.ஸயீத், மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீத், செயலாளர் ரோஷன், பொருளாளர் கெ.ஹெச்.நாஸர் ,அப்துல் மஜீத் ஃபைஸி, பேராசிரியர் பி.கோயா ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சமஉரிமை கிடைக்கும் சமூகமாக மாறும் வரை போராட்டம் தொடரும்: இ.எம்.அப்துற்றஹ்மான்"

கருத்துரையிடுக