மும்பை:காந்தி-நேரு குடும்பத்தை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பிரகாஷ் ஜாவின் 'ராஜ்நீதி' சினிமாவை தடைச்செய்ய வேண்டுமென்று கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சினிமாவில் வரும் முக்கிய கதாபாத்திரம் சோனியாவை குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் க்ளாமர் ரோல்களில் நடித்துவரும் கத்ரினா கைஃபின் உடல் அசைவுகளை அங்கீகரிக்க முடியாது எனவும் வழக்குத் தொடர்ந்துள்ள நஸீம்கான் தெரிவிக்கிறார்.
காத்ரினா கைஃப் நடிக்கும் சோனியா என்ற கதாபாத்திரம் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை அவமதிப்பதாகும் என நஸீம்கான் குற்றஞ்சாட்டுகிறார்.
'ராஜ்நீதி' இதுவரை சென்சார் போர்டின் அங்கீகாரத்திற்கு அனுப்பப்படவில்லை. ஆதலால் சினிமாவைப் பார்த்தப் பிறகே தீர்மானம் எடுக்க இயலும் என சென்சார் போர்டின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்கு விசாரணை வருகிற ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சோனியா காந்தியை அவமதிக்கும் சினிமா: தடைவிதிக்க கோரி வழக்கு"
கருத்துரையிடுக