ஜெய்பூர்:அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக் தேவேந்திர குப்தாவின் ஜார்க்கண்ட் மாநிலத்திலிலுள்ள வீட்டை ஏ.டி.எஸ் தீவிரமாக சோதனையிட்டது.
இவர் பிரச்சாரக்காக செயல்பட்ட ஜம்தாரா பகுதியில் தான் ஆதாரங்களை சேகரிக்க சோதனை நடத்தப்பட்டது.
மத்திய பிரதேசம் மஹவுவில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்காக பணியாற்றியவர் குப்தா. மூன்று பேர் கொல்லப்பட்டு 30க்கும் மேற்பட்டோருக்கு காயமேற்பட்ட அஜ்மீர் குண்டுவெடிப்பில் குற்றவாளியான மற்றொரு ஆர்.எஸ்.எஸ் தலைவரான சுசில் ஜோஷி இரண்டு மாதம் கழித்துக் கொல்லப்பட்டிருந்தார்.
இதற்குப் பிறகு குப்தா பிரச்சாரக் ஆனார். ஆர்.எஸ்.எஸ் தான் சுசில் ஜோஷியை கொன்றதாகவும் குற்றச்சாட்டு உண்டு. அதன் பிறகுதான் தனது இருப்பிடத்தை ஜம்தாராவிற்கு மாற்றினார் குப்தா.
குப்தா மற்றும் சந்திரசேகருடன் தொடர்புடைய சிலரை ஜார்கண்ட்-மேற்குவங்காள எல்லைப்பகுதியிலிருந்து ஏ.டி.எஸ் நேற்று முன்தினம் கைதுச் செய்திருந்தது.
குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி அளிக்க சிலர் தயாராகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்திய சிம் கார்டு குப்தாவுடையது தான் என்பதை போலீஸ் கண்டறிந்துள்ளது. குப்தாவுக்கெதிராக கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க ஏ.டி.எஸ் திட்டமிட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு:ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வீட்டில் ரெய்டு"
கருத்துரையிடுக