கான்பெர்ரா:பிரான்ஸ்,பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவிலும் புர்கா அணிய தடைவிதிப்பதற்கான மசோதா எம்.பிக்கள் எதிர்த்தைத் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது.
ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றத்தில்தான் எம்.பிக்கள் இம்மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர்.
பெண் சுதந்திரம், பாதுகாப்பு ஆகிய காரணங்களை காட்டி கிறிஸ்தவ டெமோக்ரேடிக் பார்டியின் ப்ரட் நில் என்பவர்தான் இம்மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பாராளுமன்றத்தின் துணை சபையின் 26 உறுப்பினர்கள் இம்மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர். மூன்றுபேர்தான் ஆதரவாக வாக்களித்தனர்.
புர்கா அணிவதில் அச்சப்பட ஒன்றுமில்லை என இஸ்லாமிக் லேபர் கட்சி எம்.பி ஷவ்கத் மொஸல்மானி தெரிவித்தார். ப்ரட் நீலின் கடும் முஸ்லிம் விரோதம்தான் இத்தகைய நடவடிக்கைக்கு பின்னணியில் உள்ளது என க்ரீன்ஸ் கட்சியின் ஜோன்கயெ கருத்துத் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆஸ்திரேலியாவில் புர்காவிற்கு தடையை எதிர்த்த எம்.பிக்கள்"
கருத்துரையிடுக