21 மே, 2010

பாகிஸ்தானில் யூ ட்யூபிற்கும் தடை

இஸ்லாமாபாத்:ஃபேஸ்புக்கிற்கு தடை விதித்ததையடுத்து பாகிஸ்தானில் வீடியோ இணையதளமான யூ ட்யூபிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அவமதிக்கும் விதமான வீடியோவை போஸ்ட் செய்ததுதான் தடைக்கு காரணம் என பாகிஸ்தான் தகவல் தொடர்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் யூ ட்யூபின் ஆட்சேபத்திற்குரிய வீடியோவைக் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விளக்கவில்லை. நேற்று மதியம் இணையதள சேவையை வழங்குவோரிடம் யூ ட்யூபிற்கு தடைவிதிக்க பாகிஸ்தான் தகவல் தொடர்பு நிறுவனம் உத்தரவிட்டது.

இறைத்தூதரின் கேலிச்சித்திரம் வெளியிட்டதற்காக ஃபேஸ்புக்கை நேற்று முன்தினம் தடைவிதிக்க லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இஸ்லாமிக் லாயர்ஸ் ஃபாரம் அளித்த மனுவின் அடிப்படையில் இம்மாதம் 31 வரை ஃபேஸ்புக்கிற்கு தடைவிதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் யூ ட்யூபிற்கும் தடை"

கருத்துரையிடுக