21 மே, 2010

மேற்குவங்கத்தில் தனி மாநிலம் அமைக்க போராடிய கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை

ஆந்திராவில் தனி மாநிலம் கோரி நடந்த போராட்டத்தை அடுத்து மேற்குவங்கம் பகுதியில் டார்ஜீலிங்கை மையமாக வைத்து கூர்கா இன மக்களுக்காக தனி மாநிலம் அமைக்க வேண்டும் என தூசி தட்டி போராட்டம் துவங்கப்பட்டது.

இந்த போராட்டம் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியவில்லை. ஆந்திரா கிடப்பில் போடப்பட்டதும் , மேற்குவங்கத்திலும் போராட்டம் அமுங்கியது. ஆல் இந்திய கூர்கா லீக்கும் பல போராட்ட திட்டங்களை வகுத்தது.

இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவர் மதங்தமாங் பொதுக்கூட்ட ஏற்பாட்டை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

வன்முறைக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அடித்து கொல்லப்பப்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மேற்குவங்கத்தில் தனி மாநிலம் அமைக்க போராடிய கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை"

கருத்துரையிடுக