முலாயம் சி்ங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை நாய்கள் என்று விமர்சித்துள்ள பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என லாலு பிரசாத் பதிலளித்துள்ளார்.
சண்டீகரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய கட்காரி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை நாய்கள் என்று விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பின்போது இருவரும் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டதை குறிப்பிட்டுப் பேசிய அவர், முலாயமும், லல்லு பிரசாத்தும் தங்களை சிங்கம் என்று வர்ணித்து கொள்கிறார்கள். அவர்கள் சிங்கம் அல்ல. சோனியாவின் காலில் விழுந்து அவரது காலையும் காங்கிரசின் காலையும் நக்கி கொண்டிருக்கும் நாய்கள்.
சி.பி.ஐ. பிடியில் சிக்கியுள்ள அவர்கள் அதிலிருந்து தப்பிக்க சோனியாவின் காலில் விழுந்து கிடக்கிறார்கள் என்றார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் லக்னோவில் உள்ள பாஜக அலுவலகம் மீது சமாஜ்வாடி கட்சியினர் தாக்குதல் நடத்தினர். உபி மற்றும் பீகாரில் கட்காரியின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து தன்னையும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய கட்காரிக்குப் பதிலடி கொடுத்துள்ள லாலு, "கத்காரிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது . முதலில் அவரது மனநலத்தை சரி செய்ய நாங்கள் அவருக்கு மாத்திரை கொடுப்போம். அதன் பின்னர் கேப்சூல்களைக் கொடுப்போம். அதுவும் பலனளிக்காவிட்டால் ஊசி போட்டு குணமாக்குவோம்". என்று பதிலளித்துள்ளார்.
thatstamil
0 கருத்துகள்: on "காங்கிரஸ் காலை நக்கும் நாய்கள் முலாயம் லாலு என்று விமர்சனம் செய்த கட்காரிக்கு லாலு பதில்"
கருத்துரையிடுக