ஹமாஸ் போராளிகளை தேடியழித்தல் என்ற பெயரில் அப்பாவிகளை கைதுச் செய்யும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகின்றது.
மேற்குக்கரையிலுள்ள பலஸ்தீனர்களின் வீடுகளை சுற்றிவளைத்து ஹமாஸ் போரளிகள் என்ற பெயரில் அப்பாவிகளை கைதுச் செய்யும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகின்றது.
மேற்குக்கரையில் இஸ்ரேலின் மற்றொரு அணுகுமுறையாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த மாதம் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்குக் கரையில் வாழ்வோர் இஸ்ரேல் அரசாங்கத்தின் அனுமதிப்பத்திரம் பெற்றிருத்தல் வேண்டும் என்ற சர்ச்சையை கிளப்பிய இஸ்ரேல், தற்போது மேற்குக்கரையில் ஹமாஸ் போராளிகள் மறைந்திருப்பதாகக் கூறி சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
சமீபத்தில் ஹமாஸின் முன்னணிப் போராளி ஒருவரை சுட்டுக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் போராளிகள் பெரும்பாலும் காஸாவில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்குக்கரையில் ஹமாஸ் போராளிகளை அழிக்கும் திட்டமொன்றைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் குறிப்பிடுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
0 கருத்துகள்: on "ஹமாஸ் போராளிகளை தேடியழித்தல் என்ற பெயரில் அப்பாவிகளை கைதுச் செய்யும் இஸ்ரேல்"
கருத்துரையிடுக