ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகாரங்களுக்கான தலைவர் ஆஷ்டன் வில் சீனாவுக்கான தனது பயணத்தின்போது, ஈரானுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடையை விதிப்பதற்கு சீனா முட்டுக் கட்டையாக இருக்கக்கூடாது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஈரானுக்கு எதிரான நான்காம் கட்ட பொருளாதாரத் தடைக்கு இதுவரை பீஜிங் தனது ஆதரவை வெளியிடவில்லை. இந் நிலையில் ஆஷ்டன் சீனாவின் ஆதரவை திரட்ட சுற்றுபயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஹூ ஜிந்தாவுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் கூறினார். தற்போது ஐரோப்பிய நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் ஈரான் விவகாரமே முதன்மை பெற்றுள்ளது.
ஈரானுக்கெதிரான பொருளாதாரத் தடைக்கு சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று அவர் பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: on "ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைக்கு சீனாவின் ஆதரவைத் திரட்ட ஐரோப்பிய ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைக்கு சீனாவின் ஆதரவைத் திரட்ட ஐரோப்பிய யூ முயற்சி"
கருத்துரையிடுக