13 மே, 2010

ஹிஜாப் தடை என்னைக் கோபமூட்டுகிறது நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் குண்டர் கிராஸ்

நோபல் பரிசுபெற்ற ஜெர்மனிய எழுத்தாளரான குண்டர் கிராஸ், 'சில நாடுகளில் மதச்சார்பின்மையின் பெயரால் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது, இல்லாத பிரச்சினையை இருப்பதாக ‘கண்டுபிடிப்பு’ செய்யப்பட்ட ஒன்று' என்று கூறியுள்ளார்.
தராப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தான் ஒரு கடவுள் மறுப்பாளராக இருப்பதால் எந்த மதத்துடனும் தொடர்புடையவனல்ல என வலியுறுத்தியிருக்கும் அவர் துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஹிஜாப் அணிவதை எதிர் வினையின் குறியீடாகப் பார்ப்பது தன்னைக் கோபமூட்டுகிறது என்று கூறியுள்ளார்.

தனது பாட்டி தலையை துணியால் மறைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், அதற்கு அவரது மத நம்பிக்கையே காரணமா என்று தனக்குத் தெரியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.செய்தி மீள்பார்வை
செய்தி:மீள்பார்வை

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிஜாப் தடை என்னைக் கோபமூட்டுகிறது நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் குண்டர் கிராஸ்"

கருத்துரையிடுக