24 மே, 2010

மங்​க​ளூர் விமான விபத்து கருப்​புப்​ பெட்டி மீட்பு

மங்​க​ளூ​ரில் விபத்​துக்​குள்​ளான ஏர் இந்​தியா விமா​னத்​தின் கருப்​புப் ​ பெட்டி ஞாயிற்​றுக்​கி​ழமை மீட்​கப்​பட்​டது.​ ​ விமான விபத்து நடந்​த​தற்​கான கார​ணத்தை அறிய உத​வும் கருப்​புப் பெட்டி மற்​றும் எஃப்​டி​ஆர் கரு​வி​கள் கண்​டு​பி​டிக்​கப்​பட்​டுள்​ள​தால்,​​ விபத்​துக்​கான கார​ணம் விரை​வில் தெரி​ய​வ​ரும்.​

​துபையி​லி​ருந்து புறப்​பட்டு,​​ கர்​நா​டக மாநி​லம் மங்​க​ளூர் பஜ்பே விமான நிலை​யத்​தில் ​ சனிக்​கி​ழமை அதி​காலை 6.30 மணிக்கு தரை​யி​றங்​கிய போயிங் ரக ஏர் இந்​தியா ​ எக்ஸ்​பி​ரஸ் 812 விமா​னம் ஓடு​பா​தை​யில் இருந்து விலகி தீப்​பி​டித்து அருகே உள்ள ​வனப்​ப​கு​தி​யின் பள்​ளத்​தில் விழுந்து நொறுங்​கி​யது.​ ​

​இந்த கோர விபத்​தில் பச்​சி​ளம் குழந்​தை​கள்,​​ பய​ணி​கள்,​​ விமா​னி​கள் உள்​பட 158 பேர் உடல் கருகி பலி​யா​னார்​கள்.​ ஒரு பெண் டாக்​டர் உள்​பட 8 பேர் மட்​டும் அதி​ருஷ்​ட​வ​ச​மாக உயிர் தப்​பி​னர்.​ விபத்து நடந்த இடத்​தில் சனிக்​கி​ழமை காலை முதல் இரவு வரை தொடர்ந்து நடந்த மீட்​புப் பணி​யில் பலி​யான 158 பேரின் சட​லங்​க​ளும் மீட்கப்பட்டன.​ ​

​ஆனால் விபத்​துக்​கான கார​ணத்தை அறிய உத​வும் கருப்​புப் பெட்டி கிடைக்​க​வில்லை.​ ​ அந்​தக் கருவி பெய​ர​ள​வில்​தான் 'கருப்​புப் பெட்டி' என்​ற​ழைக்​கப்​ப​டு​கி​றது.​ ஆனால் அதன் உண்​மை​யான நிறம் 'ஆரஞ்சு' ஆகும்.​ ​

​இந்​தக் கரு​வியை ஆங்​கி​லத்​தில் காக்​பிட் வாய்ஸ் ரெக்​கார்​டர் ​(சி.வி.ஆர்.)​ என்று அழைக்​கி​றார்​கள்.​ விமான நிலை​யத்தி​லி​ருந்து விமா​னம் புறப்​ப​டும்​போ​தும்,​​ வானில் பறக்​கும்​போ​தும்,​​ தரை​யி​றங்​கும்​போ​தும் விமா​னி​கள் மற்​றும் விமான நிலை​யத்​தி​லுள்ள ​ விமான கட்​டுப்​பாட்டு மைய ​(ஏ.டி.சி)​ அதி​கா​ரி​கள் இடையே நடக்​கும் உரையாடலை இந்த கருப்​புப் பெட்டி துல்​லி​ய​மாக தானா​கப் பதிவு செய்​யும்.​

​அனைத்து விமா​னங்​க​ளி​லும் அதன் வால் பகு​தி​யில் இந்த கருவி பொருத்​தப்​பட்டு இருக்​கும்.​ விமா​னம் எவ்​வ​ளவு பெரிய விபத்​துக்​குள்​ளா​னா​லும் இந்​தக் கருவி சேத​ம​டை​யாது.​ இந்​தக் கரு​வி​யில் பதி​வா​கும் கடைசி நேர உரை​யா​டலை வைத்து விபத்​துக்கு கார​ணம் என்ன,​​விமா​னி​கள் பேசி​யது என்ன?​ என்​பன உள்​ளிட்ட ​ விவ​ரங்​களை அறிய முடி​யும்.​ ​

​ அதே​போல எஃப்.டி.ஆர்.​ எனப்​ப​டும் விமான தக​வல் பதி​வுக் கரு​வி​யும் ​ விபத்​துக்​கான கார​ணத்தை கண்​ட​றிய உத​வும்.​ விமா​னத்​தின் தொழில்​நுட்ப தக​வல்​களை இந்​தக் கருவி பதிவு செய்​யும்.​ எனவே,​​ முக்​கி​யத் தட​ய​மாக உள்ள இந்த 2 ​ கரு​வி​க​ளை​யும் விபத்து நடந்த இடத்​தில் விமான போக்​கு​வ​ரத்து இயக்​கு​ந​ரக அதி​கா​ரி​கள்,​​ ஊழி​யர்​கள் ஞாயிற்​றுக்​கி​ழ​மை​யும் தேட ஆரம்​பித்​த​னர்.​ ​

​ அப்​போது,​​ வனப்​ப​கு​தி​யில் வெடித்​துச் சித​றிக் கிடந்த விமா​னத்​தின் வால் பகு​தி​யின் ஒரு பாகத்​தில் இருந்த அந்த கருப்​புப் பெட்​டி​யை​யும் எஃப்.டி.ஆர்.​ கரு​வி​யை​யும் அதி​கா​ரி​கள் கண்​டு​பி​டித்​த​னர்.​ அதே​போல விமா​னத்​தின் சித​றிய பாகங்​க​ளில் இருந்து விசா​ர​ணைக்கு உதவும் சில கரு​வி​க​ளை​யும் அதி​கா​ரி​கள் கைப்​பற்றி ஆய்​வுக்​காக எடுத்துச் சென்​ற​னர்.​

​ இந்த கரு​வி​கள் ஆய்​வுக்​காக திங்​கள்​கி​ழமை தில்​லிக்கு எடுத்​துச் செல்​லப்​ப​டு​கி​றது.​ அங்கு,​​ சிவில் விமா​னப் போக்​கு​வ​ரத்து இயக்​கு​ந​ர​கத்​தின் விமா​னப் பாது​காப்பு பிரிவு அதி​கா​ரி​கள் கரு​வி​களை ஆய்வு செய்​வார்​கள்.​ இந்த ஆய்​வுக்கு அமெ​ரிக்க விமான நிறு​வ​னம்,​​ போயிங் நிறு​வ​னம்,​​ கென்​யான் விமா​னப் பாது​காப்பு நிறு​வ​னம் போன்​ற​வற்​றின் அதி​கா​ரி​கள் உத​வி​ பு​ரி​வார்​கள் என்று அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மங்​க​ளூர் விமான விபத்து கருப்​புப்​ பெட்டி மீட்பு"

கருத்துரையிடுக