தென் அமெரிக்க நாடான சிலியில் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 8.8ஆக பதிவானது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர்.அவற்றின் சீரமைப்பு பணி நடைபெற்று வரும் நிலையில், இங்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.
சிலி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள தெமுகோ நகரில் இருந்து 68 கி.மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 அளவில் பதிவானது. கட்டிடங்கள் குலுங்கின.
இதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிட சேத விவரங்கள் மற்றும் உயிர் இழப்பு விவரங்கள் இல்லை.
0 கருத்துகள்: on "சிலி நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்"
கருத்துரையிடுக