2 மே, 2010

கற்பழிப்பு புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சர்- பதவிவிலகக் கோரி எடியூரப்பா வீடு மீது கல்வீச்சு

பெங்களூரு:கர்நாடக அமைச்சரவையில் உள்ள பல்வேறு அமைச்சர்கள் சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருவதால், முதல்வர் எடியூரப்பா பதவி விலகக் கோரி அவரது வீட்டை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், கல்வீச்சில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகத்தில் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா. இவர் மீது தனது நண்பரின் மனைவியை கற்பழித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஹாலப்பா விலக வேண்டும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதனால் எடியூரப்பா அரசு தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தநிலையில் இன்று ஹாலப்பா பதவியிலிருந்து விலகினார். அவரது ராஜினாமா ஏற்பதாக முதல்வர் எதியூரப்பா அறிவித்தார்.

இந்த நிலையில் எடியூரப்பாவின் அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால் எடியூரப்பா பதவியை விட்டு விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று அவரது வீட்டை இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். சிலர் கல்வீச்சிலும் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்திய 25 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கற்பழிப்பு புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சர்- பதவிவிலகக் கோரி எடியூரப்பா வீடு மீது கல்வீச்சு"

கருத்துரையிடுக